Also Watch
Read this
By: Manigandan Raja

இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களில் ஒன்று கீரி. வனவிலங்கு பட்டியலில் உள்ள இந்த மிருகம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே ஓர் மிகச்சிறந்த நண்பனாக விளங்கக்கூடிய உயிரினமாகும். மேலும் அழிந்து வரும் பட்டியலில் உள்ள இந்த விலங்கின் நலனை கருதி இதை வேட்டையாடுவதற்கோ வளர்ப்பதற்கோ தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதா.
அதை மீறி செயல்படும் நபர்கள் மீது வனத்துறை மற்றும் காவல்துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறை தண்டனை 25 ஆயிரம் ரூபாய் அபராதம் உள்ளிட்டவைகள் விதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் தன் வீட்டில் வளர்ந்து வரும் நாய்க்கு பயிற்சி அளிப்பதற்காக கீரி ஒன்றை கூண்டில் பிடித்து வைத்து அதை ஓட விட்டு நாயை கடிக்க வைப்பது போன்ற செயல்களை செய்து அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
பொதுவாக இந்த வகை விலங்கான கீரி கூச்ச சுபாவம் உடையவை பாம்புகள் எலிகள் போன்றவற்றை பிடித்து தனது உணவாக உட்கொண்டு மனிதனுக்கும் விவசாயிகளுக்கும் நன்மை செய்து வரும் இந்த விலங்கு நாய் மூலம் வேட்டையாடப்படுவது குற்றவியல் நடவடிக்கைக்கு உள்ளாகும் ஓர் விவகாரமாகும்.