Also Watch
Read this
By: Manigandan Raja

புதுக்கோட்டை மாவட்டம் கீழஏம்பல் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி இவரது மகள் மீமிசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று மாலை பள்ளி முடிந்து மாணவி தனது மிதிவண்டியில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார்.
மேலயேந்தல் பகுதியில் மாணவி சென்று கொண்டிருக்கையில், அங்கே காட்டுப் பகுதியில் மறைந்திருந்த மர்ம இளைஞர் ஒருவர் மாணவியை வழிமறித்து காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளார். அப்போது மாணவி கூச்சல் போடவே அருகே வயல் வெளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த விவசாயிகள் ஓடி வந்து மாணவியை காப்பாற்றி உள்ளனர்.

அதனை தொடர்ந்து தப்பித்து ஓடிய இளைஞரை துரத்தி பிடித்து மீமிசல் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அங்கு காவல்த்துறையினர், இளைஞரிடம் விசாரித்ததில கோபாலபட்டினம் அவுலியா நகரை சேர்ந்த பைசல்கான் (19) என்பதும் அவர் கஞ்சா போதையில் தவறாக நடக்க முயற்சித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
அதனை தொடர்ந்து வழக்கு பதிந்த காவல்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற 10ம் வகுப்பு மாணவியிடம் கஞ்சா போதையில் தவறாக நடக்க முயன்ற இளைஞரால் அப்பகுதியில் பரபரப்பாக கானப்படுகிறது.