Also Watch
Read this
By: Web Team

Baahubali 3: இந்திய சினிமாவின் பிரமாண்ட படைப்புகளின் ஒன்றான பாகுபலி குறித்த சர்பிரைஸ் தகவல் ஒன்று வெளியாகி இருக்கு.
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ரம்யாகிருஷ்ணா, ராணா, சத்யராஜ் என பலரும் நடித்த பிரமாண்ட படம்தான் பாகுபலி. படத்தின் முதல் பாகம் மிகுந்த வரவேற்பை பெற்றதோடு பான் இந்தியா படமாக வசூலிலும் சாதனை படைத்தது.
சஸ்பென்ஸுடன் முடிந்த பாகுபலி முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வெளிவந்த பாகுபலி-2 ரசிகர்களால் கொண்டாடப்பட்டு காவியமாக பார்க்கப்பட்டது.

பாகுபலியின் தீவிர ரசிகர்கள் அடுத்த பாகம் எப்போது வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பாகுபலி தி டார்ச்பியரர் என்ற டாகுமெண்ட்ரி தொடர் வெளியானது. அதில் பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, ராணா ஒன்றாக அமர்ந்து பேசியுள்ளது. அப்போது பேசிய பிரபாஸ் சிரித்து கொண்டே தனது மூன்று விரல்களை காட்டினார்.

பிரபாஸ் சைகையால் மூன்று விரல்களை காட்டியதால் பாகுபலி 3 வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாகுபலியின் அடுத்த பாகத்தின் அப்டேட்டை பிரபாஸ் கொடுத்திருப்பதாக நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதற்கிடையே அந்த ஆவணப்படத்தின் இறுதியில் பாரம்பரியம் தொடர்கிறது என்ற வாசகமும் இடம்பெற்றிருப்பதால் பாகுபலி படத்தின் மூன்றாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.