news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews அடுத்தடுத்து 8 ஆண்கள் மர்ம மரணம்.!
tv

Also Watch

tv

Read this

அடுத்தடுத்து 8 ஆண்கள் மர்ம மரணம்.!

சீரியல் கில்லராக மாறிய மளிகை கடைக்காரர்.!

3

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
murder

Crime:அன்னைக்கு பதறியடிச்சு போலீஸ் ஸ்டேஷனுக்கு குடும்பத்தோடவும், ஊர்மக்களோடவும் வந்த அந்த நபர் சார் என்னை ஒருத்தரு கொல்ல பார்த்தாரு சார், ஆனா நான் தப்ப்பிச்சுட்டேன்னு வேர்க்க விறுவிறுக்க சொன்னாரு..அவரோட வந்த கிராம மக்களும் சார் இதுவரை எங்க கிராமத்துல 8 ஆண்கள் மர்மமான முறையில உயிரிழந்ததா சொல்லி போலீஸ்காரங்களையே அதிர வச்சாங்க... இதக்கேட்டு வெள வெளத்துப்போன போலீஸ்காரங்களுக்கு அவங்க பிடிக்க போறது ஒரு சாதாரண ஆள் இல்ல அவன் ஒரு சீரியல் கொலைகாரன்னு அப்போ தெரியல. சும்மா ஒருத்தர் ரெண்டு பேரு இல்ல 8 பேரை போட்டுத்தள்ளுன அவன் யாரு? எதுக்காக இப்படி கொலை செஞ்சான்? அவனுக்கு அதுல என்ன அப்படி ஒரு சந்தோஷமுன்னு விசாரிச்சதுல வெளியாச்சு குலை நடுங்க வச்ச அந்த பயங்கரம் சம்பவம்...

சதீஸ்கர் மாநிலம் பலோடா பஜார் மாவட்டத்தில் உள்ள கார்வே கிராமத்தில வசிச்சிட்டு வந்தவரு ராம்சஹாய் ஜெயஸ்வால். பாக்க்குறது மட்டும் இல்ல பழகுறதுக்கும் சாதாரணமா இருக்கும் இவரு அதே கிராமத்துல சின்னதா ஒரு மளிகைகடை நடத்திட்டு வந்துருக்காரு.. இவரு மேல அந்த கிராமத்துல இருந்த சிலர் வன்மத்தோடு இருந்ததா கூறப்படுது.. அதனால மனசு வெறுத்துப்போன ஜெய்ஸ்வால் தன்னை வெறுக்குறவங்களையும் , தன்ன கேலி கிண்டல் செய்றவங்களையும், சாதிய ரீதியல பேசுறவங்களை எல்லாம் திருத்தெல்லாம் முடியாதுன்னும் ஆனா ஒரேடியா இல்லாம ஆக்கிட்டா இதுபோன்ற மன உளைச்சல்கள் தனக்கு ஏற்படாதுன்னும் முடிவு செஞ்சதா கூறப்படுது.. அதுக்காக திட்டம் போட்ட ஜெய்ஸ்வால் எலி மருந்த வாங்கி முதல்ல நாய்க்கு கொடுத்து பரிசோதிச்சு பாத்துட்டு பிறகு தனக்கு பிடிக்காதவங்களுக்கு யூஸ் பண்ண தொடங்குனதா சொல்லப்படுது.

பிப்ரவரி 6 ஆம் தேதி அன்னைக்கு மதுபானம் கேட்டு நச்சரித்து தன்னை திட்டிய 58 வயதான பத்ரி படேல் மேல கடும் கோபத்துல இருந்த ஜெய்ஸ்வால் அவருக்கு அந்த விஷம் கலந்த மதுவ கொடுத்து தன்னோட முதல் கொலையை செய்தாரு.. முதல் கொலை சத்தமே இல்லாம இறுதி சடங்கெல்லாம் முடிஞ்சு வெளிய தெரியாம போனதால கடகடன்னு அடுத்தடுத்து கொலைகளையும் செய்ய ஜெய்ஸ்வால் முடிவு செஞ்சாரு.. இரண்டாவதா பிப்ரவரி 20 ம் தேதி 60 வயதான புதாலு சாஹு ங்குறவரு தன்னோட கலார் சமூகத்தை இழிவா பேசியதுக்காக போட்டு தள்ளி இருக்காரு.. மூன்றாவதா நிலம் தொடர்பா தன்னோட சண்டை போட்ட 60 வயதான புத்ராம் ஜெயஸ்வாலை மார்ச் 12 ம் தேதி இதே பாணியில கொன்னாரு. நான்காவதா மார்ச் 20ம் தேதி தன்னோட மனைவி மேல கண்ணு வச்சதா குற்றசாட்டி சத்து ராம் சாஹுங்குறவரோட கதையை முடிச்சாரு.

ஐந்தாவதா மார்ச் 31ம் தேதி அன்னைக்கு தன்னை பத்தி எப்போது பார்த்தாலும் அவதூறு பேசிட்டு வந்த 38 வயதான வினோத் குமார் சாஹுவ சத்தமே இல்லாம மேல் லோகத்துக்கு அனுப்பியிருக்காரு ஜெய்ஸ்வால்... ஆறாவதா ஏப்ரல் 28ம் தேதி அன்னைக்கு தனக்கு எதிராக மாந்திரீக முறைகளைப் பயன்படுத்துவதாக சந்தேகப்பட்ட ஜெய்ஸ்வால் 55 வயதான கஜானந்த் மன்ஜிய தீர்த்து கட்டுனாரு.. ஏழாவதா ஏப்ரல் 29ம் தேதி தன்கிட்ட 50,000 ரூபாய் கடன் வாங்ககிட்டு திருப்பி கொடுக்காம ஏமாத்திட்டு வந்த 58 வயதான சைதுராம் சாஹுவ முடிச்சுவிட்டாரு.. கடைசி 8வதா மே 14 ம் தேதி அன்னைக்கு தன்னை கேலி செய்ததா 41 வயதான மகேத்ரு ராம் சாஹுவையுமேல சொன்ன 7பேரை கொன்ன மாதிரி விஷம் கலந்த மது கொடுத்து அவரையும் காலி பண்ணதா சொல்லப்படுது. 



இதேபோல ஏப்ரல் 14ம் தேதி அன்னைக்கு சில வருஷங்களுக்கு முன்னால தனக்கும் கார்த்திக் கும்ஹாருக்கும் தகாராறு இருந்ததாகவும் அதனால அவரும் இந்த உலகத்துல வாழ தகுதி இல்லாதவருன்னு முடிவு பண்ணுன்ன ஜெய்ஸ்வால் அதே பாணியில அவருக்கு அந்த விஷம் கலந்த மதுவை ஊத்தி கொடுத்துருக்காரு. அத குடிச்சிட்டு வீடு திரும்பிய கும்ஹார், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரு. அதுக்கு பிறகு தான் கும்ஹார், தனக்கு உடல்நிலை சரியில்லாமல் போகுறதுக்கு முன்னால ஜெயஸ்வாலுடன் மது குடிச்சதா தன் குடும்பத்தார்கிட்ட சொல்லியிருக்காரு,.

பிறகு உயிர்பிழைச்ச கும்ஹார் , ஜெயஸ்வால் மேல சந்தேகம் இருக்குறதா கூறி ஜூன் 6 ஆம் தேதி தன்னோட குடும்பத்தாருடனும், மற்ற கிராம மக்களோட சேர்ந்து காவல்துறையை அணுகியிருக்காங்க.. பிறகு ஜெய்ஸ்வால் கிட்ட நடத்துன விசாரணையில விதவிதமா வித்தியாசமான காரணங்களோட இதுக்கு முன்னால மொத்தம் 8 பேரை கொன்ன பகீர் சம்பவம் அம்பலமாச்சு.. பிறகு அனைத்து உடல்களையும் தோண்டி எடுத்த போலீஸ்காரங்க பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வச்சிட்டு ஜெய்ஸ்வாலை கைது பண்ணி தீவிர விசாரணைக்கு பிறகு சிறையில அடைச்சாங்க.

Related Link
முதல்வராக விஜய் மட்டும்தான் மாரத்தான் ஓடினாரா? - ஆதவ் பேச்சின் டீகோட் இதோ!

முதல்வராக விஜய் மட்டும்தான் மாரத்தான் ஓடினாரா? - ஆதவ் பேச்சின் டீகோட் இதோ!



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன் 26062026

0
21 mins agoshare
ராசி பலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau