news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news முதல்வராக விஜய் மட்டும்தான் மாரத்தான் ஓடினாரா? - ஆதவ் பேச்சின் டீகோட் இதோ!
tv

Also Watch

tv

Read this

முதல்வராக விஜய் மட்டும்தான் மாரத்தான் ஓடினாரா? - ஆதவ் பேச்சின் டீகோட் இதோ!

உண்மை இதுதான்!

7

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
HLtdnEbboAALHAf

இந்திய வரலாற்றிலேயே முதலமைச்சர் விஜய் மட்டும்தான் மாரத்தான் ஓடினார் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியது எந்த அளவுக்கு உண்மை என்பதே தற்போது விவாதமாகியுள்ளது. 

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற ஸ்டார்ட் RUN ஸ்டாப் DRUGS மாரத்தான் போட்டி வெறும் விழிப்புணர்வு ஓட்டமாக மட்டும் அமையவில்லை. மேடையில் நின்று கொடியசைத்து, வாழ்த்துரை வழங்கிவிட்டுச் செல்லும் முதலமைச்சர்களை பார்த்த தமிழக மக்களுக்கு, இன்று காலை நடந்த நிகழ்வு ஆச்சர்யம் தான் . தங்களின் 52 வயது முதலமைச்சர் விஜய், இளைஞர்களோடு இளைஞராக டிராக்கில் இறங்கி, வியர்வை சிந்த 3 கிலோமீட்டர் தூரம் ஓடிய அந்தப் புகைப்படங்களும் காணொளிகளும் தான் இன்று இணையத்தின் டாப் ட்ரெண்டிங்!

மாரத்தான் ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, உணர்ச்சிப்பொங்க பேசினார்.அவர் பேசுகையில் தமிழ்நாட்டில் அல்லது இந்திய அளவில் இதுவரை இருந்த முதலமைச்சர்களிலேயே, மாரத்தான் போட்டியில் வெறும் கொடியசைப்பதோடு நிறுத்தாமல், நேரில் பங்கேற்று 3 கிலோமீட்டர் தூரம் வரை ஓடிய ஒரே முதலமைச்சர் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜோசப் விஜய தான். இது இளைஞர்களுக்கான அரசு, விளையாட்டின் உண்மையான முகமாக நம் முதல்வர் திகழ்கிறார் என்று இந்திய அளவிலான ஒரு மாபெரும் சாதனையாக இதனைப் பேசினார். அமைச்சரின் இந்தப் பேச்சு வெளியான சில நிமிடங்களிலேயே, சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் பரவத் தொடங்கின.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் கூற்று அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளான நிலையில், இதன் உண்மைத்தன்மை குறித்து நிறைய இணைய வாசிகள் Data analysis பண்ணி நிறைய விவரங்கள பகிரத் தொடங்கிட்டாங்க. சரி இந்திய அரசியல் வரலாற்றில், முதலமைச்சராகப் பதவியில் இருக்கும் போதே டிராக்கில் இறங்கி பிற முதலமைச்சர்கள் ஓடினது இல்லையான்றத ஒரு சில எடுத்துக்காட்டுகள் மூலமா பாக்கலாம். இந்த மாதிரி மாரத்தான் போட்டிகள்னா நமக்கு உடனே நினைவுக்கு வர்றவரு ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லாதான். இந்திய அரசியல்வாதிகளிலேயே மிகச்சிறந்த தடகள உடற்தகுதி கொண்டவர்களில் முதன்மையானவர். கடந்த அக்டோபர் 20, 2024 அன்று நடைபெற்ற காஷ்மீர் சர்வதேச மாரத்தான் போட்டியில, முதல்வர் பதவியில் இருந்துகொண்டே 42 கிலோமீட்டர் கொண்ட மாரத்தான்ல 21.1 கிலோமீட்டர் தூரம் அதாவது அரை மாரத்தானை வெறும் 2 மணி நேரத்தில் ஓடி முடித்து இந்திய அளவில் சாதனை படைத்தார். தொடர்ந்து 2026 ஜனவரியில் டாடா மும்பை மாரத்தானிலும், மார்ச் 2026-ல் ஜம்மு மாரத்தானிலும் இதேபோல் 21 கி.மீ தூரத்தை அவர் கடந்துருக்காரு.

அடுத்ததா, நயாப் சிங் சைனி ஹரியானா முதல்வர் ஹரியானாவில் போதைப்பொருள் விழிப்புணர்வுக்காகப் பல மாரத்தான்களை நடத்தியவர். செப்டம்பர் 2025-ல் குருக்ஷேத்ராவில் நடைபெற்ற நமோ யுவா ரன்'நிகழ்வில் 5 கிலோமீட்டர் தூரப் பந்தயத்தில் இளைஞர்களுடன் முழுமையாக ஓடினார். அதுமட்டுமின்றி, நவம்பர் 2025-ல் ஃபதேஹாபாத் ஒற்றுமைக்கான ஓட்டத்தில் 1.5 கிலோமீட்டர் தூரமும் நேரடியாக ஓடிக் கடந்துள்ளார்.

இப்படி பல தருணங்கள்ல இந்திய அளவுல பல முதலமைச்சர்கள் மாரத்தான துவங்கி வச்சது மட்டுமல்லாம கலந்துட்டும் இருக்காங்க. மம்தா சர்வதேச பருவநிலை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, டார்ஜிலிங் மாவட்டம் குர்சியாங்கில் இருந்து மகாநதி பகுதி வரை செங்குத்தான மலைப்பாதையில் 10 கிலோமீட்டர் தூரம் 5 கி.மீ கீழ்நோக்கியும், மீண்டும் 5 கி.மீ மேல்நோக்கியும் தனது அதிகாரிகளுடன் அவர் ஓடிக் கடந்தார். இப்படி பல முதலமைச்சர் பலமாதிரி விழிப்புணர்வு நிகழ்வகள்ல கலந்துட்டு இருக்காங்க.

இந்தத் தரவுகளைப் பார்க்கும் போது, இந்தியாவிலேயே ஓடிய ஒரே முதல்வர் விஜய் தான் என்ற அமைச்சரின் வார்த்தைகளில் டெக்னிக்கலா சில திருத்தங்கள் தேவைப்படுதுதான்.

ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களுக்கும் ஒரு உடற்தகுதி ரோல் மாடலாக முதலமைச்சர் இருக்கிறார். தமிழகத்துல மற்ற முதலமைச்சர்கள் செய்யாததை தற்போதைய தலைமை செய்கிறது என்ற செய்தியதை கடத்த நினைத்து உணர்ச்சியில் அவர் பேசியது தற்போது போதைப்பொருளை ஒழித்து இளைஞர்களை நல்வழிப்படுத்தனும் என்ற தலைப்பில் இருந்து மாறி தற்போது வேறு வகையில் அது எடுத்துச் செல்லப்படுவதாக ஒரு தரப்பினர் பார்வைகள பகிர்ந்துட்டு வர்றாங்க.

ஒரு விளையாட்டுத்துறை அமைச்சராக, தன் மாநில முதலமைச்சர் 3 கிலோமீட்டர் தூரம் களத்தில் இறங்கி ஓடி, ஒட்டுமொத்த இளைஞர் சமூகத்திற்கும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் அவருக்கு இருக்கும் பெருமிதம் முற்றிலும் நியாயமானது!காஷ்மீரிலோ அல்லது ஹரியானாவிலோ முதல்வர்கள் ஓடியிருக்கலாம் ஆனால், இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான, 8 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில், ஒரு முதலமைச்சர் டிராக்கில் இறங்கி இவ்வளவு துாரம் ஓடியது இதுவே முதல்முறை. அதனை ஒரு விளையாட்டு வீரராகவும் அமைச்சராகவும் ஆதவ் அர்ஜுனா சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. வார்த்தைகளைத் தாண்டி, விதைத்திருக்கும் இந்த ஆரோக்கியமான நடைமுறைக்கும் வரும் காலங்களில் போதைப்பொருளை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கைகளை தீவிரப் படுத்த வேண்டும் என்ற குரலை ஓங்கி ஒலிக்க வேண்டியதாக உள்ளது என்பதே இணையவாசிகள் பகிரும் கருத்தாக உள்ளது.

Related Link
காலையில் ஓடிய முதல்வர் விஜய்.. அதிர்ந்த மெரினா

காலையில் ஓடிய முதல்வர் விஜய்.. அதிர்ந்த மெரினா


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வராக விஜய் மட்டும்தான் மாரத்தான் ஓடினாரா? - ஆதவ் பேச்சின் டீகோட் இதோ!

6
1 hr 2 mins agoshare
HLtdnEbboAALHAf








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau