news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews டிரில்லியனர் அந்தஸ்தை இழந்த எலான் மஸ்க்
tv

Also Watch

tv

Read this

டிரில்லியனர் அந்தஸ்தை இழந்த எலான் மஸ்க்

எலான் மஸ்க்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Elon musk

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவன சந்தை மதிப்பு வீழ்ச்சி :

ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், டிரில்லியனர் அந்தஸ்தை இழந்துள்ளார். எனினும், உலகின் மிக பெரும் பணக்காரராக அவர் தொடருகிறார். அவரது நிகர சொத்து மதிப்பு 957 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.

பிரான்சில் வரலாறு காணாத வெப்பம்: 109.4 டிகிரி பதிவு :

பிரான்சில் வரலாறு காணாத வெப்பம் நிலவி வருவதால், வெப்ப அலை காரணமாக 68 ஆயிரம் வீடுகள் மின்சாரமின்றி இருளில் மூழ்கி உள்ளன. இதனால், ஈபிள் டவர், லூவர் அருங்காட்சியகம் போன்ற பகுதிகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக இல்லை. முன்னெப்போதும் இல்லாத வகையில் வெப்பநிலை 109.4 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவானதாக வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

"ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் மையங்களில் ஆய்வு" :

ஈரானில் உள்ள அணுசக்தி செறிவூட்டல் மையங்களில் ஐ.நா. சபையின் சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு முகமையின் நிபுணர்கள் குழு விரைவில் நேரில் ஆய்வு நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய அந்த முகமையின் தலைவர் ரபேல் மரியானோ குரோசி, இரு நாட்டு அதிபர்களும் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தப்படி ஆய்வு நடத்தியே தீருவோம் என்றார்.

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் தலைநகரில் குலுங்கிய கட்டடங்கள் :

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் தலைநகர் கராகஸில் உள்ள கட்டடங்கள் குலுங்கின. கரீபியன் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள மோரோன் பகுதிக்கு மேற்கே சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 13 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.

Related Link

"ஹோர்மூஸ் நீரிணையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது"

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

20 இடங்களை புரட்டிய பின்...விஜிலென்ஸ் வெளியிட்ட முக்கிய அறிக்கை!!

7
31 mins agoshare
E VA Velubutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau