Also Watch
Read this
By: Manigandan Raja

ஒழுங்குமுறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் :
டெல்லியில் இருந்து பஞ்சாப் சென்ற ஏர் இந்தியா விமானம் சிறிது நேரம் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் பறந்தது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 22-ம் தேதி டெல்லியில் இருந்து அமிர்தரஸ்-க்கு சென்ற ஏர் இந்தியா விமானம், தரையிறங்குவதற்கு முன்னதாக வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென சில வினாடிகள் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் சென்றுள்ளது.
குடியுரிமைக்கான ஆவணம் பாஸ்போர்ட் அல்ல :

பாஸ்போர்ட் பயன்பாடு குறித்து மக்களிடம் குழப்பம் எழுந்த நிலையில், பாஸ்போர்ட் என்பது பயண ஆவணம் மட்டுமே, குடியுரிமைக்கான ஆவணம் அல்ல என மத்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
பாஸ்போர்ட் என்பது மிகுந்த ஆய்வுக்குப் பிறகே குடிமக்களுக்கு வழங்கப்படுவதாகவும், அது பல அரசு நிறுவனங்களின் ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"எல் நினோ" காலநிலை மாற்றம் எதிரொலி :
எல் நினோ ((El Niño)) எதிரொலியாக இந்தியாவின் 12 மாநிலங்களில் உள்ள 111 மாவட்டங்கள் "தீவிர கவலைக்குரியவை" என மத்திய அரசு அறிவித்துள்ளது. பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக, நடப்பாண்டு தென்மேற்குப் பருவமழை 43 சதவீதம் குறைந்துள்ளது.
இதனால் காரிஃப் பயிர் சாகுபடி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், வறட்சியை சமாளிக்க நீர் சேகரிப்புப் பணிகளைத் தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது.