news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews இந்திய வான்வெளிக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானங்கள்
tv

Also Watch

tv

Read this

இந்திய வான்வெளிக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானங்கள்

பாகிஸ்தான் விமானம்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பாகிஸ்தான் விமானங்கள்

(Coutesy : flyjinnah)

மோசமான வானிலை, புயல் காரணமாக நுழைந்ததாக தகவல் :

பாகிஸ்தானின் 3 வர்த்தக விமானங்கள் இந்திய வான்வெளிக்குள் நுழைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 12-ம் தேதி 3 விமானங்கள் பல நிமிடங்கள் இந்திய வான்வெளியில் நிலை கொண்டிருந்ததாகவும், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை தாக்கிய மோசமான வானிலை மற்றும் புயல் காரணமாக விமானம் இந்திய வான்வெளியில் நுழைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

3 மாடி கிடங்கு இடிந்து விழுந்து 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு :

(Courtesy: PTI)

கொல்கத்தாவின் தாரதலா பகுதியில் கட்டுமான பணியின்போது 3 மாடி கிடங்கு இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், 20 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கான்கிரீட் மற்றும் எஃகு இடிபாடுகளுக்கு இடையே மேலும் 15 தொழிலாளரிகள் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பாஜக கவுன்சிலர்கள் 20 பேர் பதவியேற்றது செல்லாது :

கேரளத்தில் பாஜக கவுன்சிலர்கள் 20 பேர் பதவியேற்றது செல்லாது என அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவனந்தபுரம் மாநகராட்சி பாஜக கவுன்சிலர்கள் 20 பேர் "கடவுளின் பெயரால்" அல்லது "உளமார" என்று கூறாமல் பதவியேற்பு உறுதிமொழி எடுத்ததை எதிர்த்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Related Link
மிக அதிக கனமழை கொட்ட போகுது - ரெட் அலர்ட் தந்த வானிலை

மிக அதிக கனமழை கொட்ட போகுது - ரெட் அலர்ட் தந்த வானிலை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

20 இடங்களை புரட்டிய பின்...விஜிலென்ஸ் வெளியிட்ட முக்கிய அறிக்கை!!

8
54 mins agoshare
E VA Velubutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau