Also Watch
Read this
By: Manigandan Raja

வைபவ் சூர்யவன்ஷியின் இந்திய அணி ஜெர்சி எண் 3 :
இந்திய கிரிக்கெட் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் ஜெர்சி எண் 3 குறித்த ரகசியம் வெளியாகி உள்ளது. இந்திய அணியில் இடம்பிடித்துள்ள இவர், இதற்கு முன்பு, 12 மற்றும் 18 ஆகிய ஜெர்சி எண்களையே பயன்படுத்தி வந்தார். இந்த சூழலில், ஜெர்சி எண் 3-ஐ தேர்வு செய்ய அவரது தாயார் முக்கிய காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
அதாவது, 1 மற்றும் 2 ஆகிய எண்களை கூட்டினால் 3 வருவதால், 12 என்ற இரட்டை இலக்க எண்ணுக்கு பதிலாக நேரடியாக 3 என்ற ஒற்றை இலக்க எண்ணையே பயன்படுத்தலாம் என அவரது தாயார் ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.
ரோகித்தின் சாதனையை முறியடிக்க சஞ்சுவுக்கு வாய்ப்பு :

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்தியாவின் சஞ்சு சாம்சனுக்கு ரோகித் சர்மாவின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது, அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டி வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்கிற சாதனையை ரோகித் சர்மா தக்கவைத்துள்ளார்.
அவர் 4 டி20 போட்டிகளில் விளையாடி 3 அரைசதங்கள் உட்பட 201 ரன்கள் குவித்துள்ளார். சஞ்சு சாம்சன் இதுவரை 3 டி20 போட்டிகளில் விளையாடி 118 ரன்கள் எடுத்துள்ளார். இந்த சூழலில், இந்திய கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்து சுற்றுப்பயணம் சென்று 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது.
இன்றுவிளையாட்டு செய்திகள் கள் பலப்பரீட்சை :
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் இரு அணிகளுமே வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் மைதானத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது, இரு அணிகளும் இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் தலா 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் தலா 4 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன. ஆகவே, இந்த போட்டியில் வெற்றிபெறும் அணிக்கே அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்பதால், இரு அணிகளும் வெற்றிபெற போராடும்.