news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home health டீ-யுடன் சேர்த்து மாத்திரை சாப்பிடுவதால் ஆபத்தா?
tv

Also Watch

tv

Read this

டீ-யுடன் சேர்த்து மாத்திரை சாப்பிடுவதால் ஆபத்தா?

இந்த தவறை செய்யாதீங்க!

3

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tea

Tea vs Tablet: டீ அல்லது காபியுடன் மாத்திரைகளை உட்கொள்ளும் சில பேர் வழக்கமாக வச்சி இருப்பாங்க.இப்படி ”டீ”யோட tablet எடுத்துக்கிட்டால் உடலுக்கு நல்லதா? என்று யாருமே யோசிப்ப்பது இல்லை. இப்படி டீ-யுடன் மத்திரையை சாப்பிட்டால் உடலுக்குள் என்ன நடக்கும்? என்பது குறித்து நிபுணர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று இந்த வீடியோவில் பார்க்கலாம்.

எப்போதுமே மாத்திரைகளை சாதாரண தண்ணீருடன் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். டீயுடன் மாத்திரையை சேர்த்து சாப்பிடுவது மருந்தின் வீரியத்தை குறைப்பதோடு, உடலுக்குப் பல்வேறு பக்க விளைவுகளை உண்டாக்கும் என்று நிபுணர்கள் சொல்கின்றனர். 

டீயில் உள்ள 'டானின்' (Tannin) மற்றும் 'கேட்டசின்' (Catechin) போன்றவை மருந்துடன் வேதி வினைபுரிந்து மருந்து உடலில் முழுமையாகக் கரைந்து இரத்தத்தில் கலப்பதைத் தடுக்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால், சாப்பிடும் மாத்திரைக்கான பலன் உடலுக்குக் கிடைக்காமல் போகும் நிலை ஏற்படலாம். அதேபோல இரும்பு சத்துள்ள மாத்திரைகளை டீயுடன் சேர்த்து எடுத்து கொள்ளும்போதும் டீயில் உள்ள Tannin என்ற இரும்புச்சத்தை உடல் உறிஞ்சவிடாமல் தடுத்து இதனால் மாத்திரை சாப்பிடுவது அதன் பலனை அளிக்காமல் போகலாம் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் டீயில் உள்ள காஃபின், ஆஸ்துமா மருந்துகள், மன அழுத்தத்திற்கான மருந்துகள், காய்ச்சல் மாத்திரைகளோடு எதிர்மறையாக வினைபுரிய வாய்ப்புள்ளதால் அதன் விளைவாக நெஞ்சு படபடப்பு (Increased heart rate), இரத்த அழுத்த மாறுபாடு, தூக்கமின்மை, பதற்றம் ,வயிற்று எரிச்சல் , அசிடிட்டி போன்ற பக்க விளைவுகளை உண்டாக்கும்.

மேலும், டீ மற்றும் மாத்திரைகளை ஒன்றாக சேர்த்து எடுக்கும்போது, கல்லீரல் அந்த மருந்தை உடைத்து பிரித்தெடுப்பதில் கூடுதல் சுமையைச் சந்திக்கிறது. இது காலப்போக்கில் கல்லீரலின் ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதனால்தான் மாத்திரைகளை எப்போதும் போதுமான அளவு சாதாரண குடிநீருடன் மட்டுமே விழுங்க வேண்டும். அதேநேரம் மாத்திரைகளை சாப்பிட அதிக சூடான தண்ணீரையும் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லப்படுகிறது.

ஒருவேளை டீ அல்லது காபி குடிக்க விரும்பினால், மாத்திரை சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்போ அல்லது சாப்பிட்ட 30 நிமிடங்களுக்குப் பின்போ அதை குடிப்பது பாதுகாப்பானது.

Related Link
காலையில் ஓடிய முதல்வர் விஜய்.. அதிர்ந்த மெரினா

காலையில் ஓடிய முதல்வர் விஜய்.. அதிர்ந்த மெரினா

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டீ-யுடன் சேர்த்து மாத்திரை சாப்பிடுவதால் ஆபத்தா?

2
1 hr 44 mins agoshare
tea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau