Also Watch
Read this
மேற்காசிய போர் காரணமாக, விநியோக தடை ஏற்பட்டதால், இந்தியாவில் கேஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு என தகவல் வெளியாகி உள்ளது. மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் வர்த்தக ரீதியிலான சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டதால், வர்த்தகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

கடை நடத்த முடியுமா? வர்த்தகர்கள் அதிர்ச்சி
சென்னை அருகே மணலியில் உள்ள ஐ.ஓ.சி. சிலிண்டர் நிரப்பும் நிறுவனத்தில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வர்த்தக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், உணவகங்கள், தேநீர் கடைகள் மூடும் நிலை உருவாகும் என்று கூறப்படுகிறது. டீ, காபி விலை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் சூழல் உருவாகும் என்றும் வர்த்தகர்கள் கவலை தெரிவித்தனர்.

வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு முன் உரிமை
வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள விவகாரத்தில், மத்திய அரசு தலையிட வேண்டும் என்று ஹோட்டல் -உணவக கூட்டமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த சூழல், உணவக தொழிலிலும், உணவு விநியோகத்திலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்திருப்பது, ஹோட்டல்கள், உணவக உரிமையாளர்கள் உள்ளிட்ட வர்த்தகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.