தமிழ்நாடு

இருசக்கர வாகனமும் காரும் மோதிய விபத்து பரிதாபமாக உயிரிழந்த பள்ளி சிறுவன்

இருசக்கர வாகனமும் காரும் மோதிய விபத்து பரிதாபமாக உயிரிழந்த பள்ளி சிறுவன்


கன்னியாகுமரி மாவட்டம் தெற்கு சூரங்குடி பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு
படிக்கும் பள்ளி மாணவன் அஜார்(15). இவர் சங்குதுறை கடற்கரை அருகே இருசக்கர
வாகனத்தில் சென்று கொண்டு இருக்கும் பொழுது அவ்வழியாக சென்ற சொகுசு கார் பள்ளி
மாணவன் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது.இந்த விபத்தில்
பள்ளி மாணவனும் அவர் வந்த இருசக்கர வாகனமும் சொகுசு காரின் அடியில்
சிக்கியது.இந்நிலையில் சொகுசு காரில் வந்த நபர் காரை நிறுத்தாமல் தொடர்ந்து
சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு மேலாக ஒட்டி சென்றுள்ளதாக தெரிகிறது.இதனால்
இருசக்கர வாகனமும் பள்ளி சிறுவனும் காரின் அடியில் சிக்கி இழுத்து
செல்ப்பட்டார்கள்.மேலும் சொகுசு காரானது இருசக்கர வாகனத்துடன் ஏற்பட்ட மோதல்
காரணமாக இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் டாங்க் உடைந்து அதன் காரணமாக சங்குதுறை
கடற்கரை சாலையில் வைத்து இருசக்கர வாகனம் தீ பிடித்தது. இதில் சொகுசு காரின்
அடியில் சிக்கிய பள்ளி சிறுவன் மற்றும்அவர் வந்த இருசக்கர வாகனமும் தீ பற்றி
நடுச்சாலையில் எரிந்தது. இதில் பள்ளி சிறுவன் தீயில் கருகி பரிதாபமாக
உயிரிழந்தான்.மேலும் விபத்து ஏற்படுத்திய சொகுசு காரும் தீயில் கருகியது.இந்த
விபத்தை பார்த்த பொதுமக்கள் செய்வதறியாது அதிர்ச்சியில் உறைந்து
நின்றார்கள்.தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் கருகிய நிலையில்
காணப்பட்ட சிறுவனின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் விபத்து குறித்து சுசீந்திரம்
போலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச் சம்பவம் அப்பகுதியில் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியது.

00 Comments

Leave a comment