தமிழ்நாடு

ரோஜா பூக்களின் விலை இரண்டு மடங்காக உயர்வு

ரோஜா பூக்களின் விலை இரண்டு மடங்காக உயர்வு

 

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் அமைந்துள்ள மலர் சந்தையானது தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா அளவில் பூக்கள் ஏற்றுமதி, இறக்குமதி விற்பனைக்கு புகழ் பெற்று விளங்குகிறது.  குறிப்பாக அந்த மலர் சந்தைக்கு பல வகையான ரோஜா பூக்கள் பெங்களூர், ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து அதிகளவில் ஏற்றுமதி ஆகி வருகிறது. இந்நிலையில் கடும்பனி பொழிவு காரணமாக ஓசூர், பெங்களூர் பகுதிகளில் இருந்து தோவாளை மலர் சந்தைக்கு ரோஜா  பூக்கள் வரத்து குறைந்துள்ளது. நாளை மறுநாள் காதலர் தினம் கொண்டாடப்பட இருப்பதால் காதலுக்கு அடையாளமாக திகழும் ரோஜா பூக்களின் விலை உயர்ந்துள்ளது. அதேபோல், காதலர் தினத்தன்று அதிகமாக பயன்படுத்தும் தாஜ்மஹால் ரோஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கட்டு 150 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு கட்டு 300 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சில்லறை விலையில் ஒரு தாஜ்மஹால் பூ 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரைக்கும், மிராபிள் ரோஜா 60 ரூபாயில் இருந்து 100 ரூபாய்க்கும், ஸ்டார் ரோஜா 50 ரூபாயில் இருந்து 90 ரூபாய்க்கும், பட்டர் ரோஸ் 50 ரூபாயில் இருந்து 100 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.  இன்றும், நாளையும் இந்த விலை உயர்வு இருக்கும் என தோவாளை பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

00 Comments

Leave a comment