தமிழ்நாடு

தனியார் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.14 லட்சம் பறிமுதல்

தனியார் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.14 லட்சம் பறிமுதல்

நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் உள்ள ஏ.டி.எம்.மில் நிரப்புவதற்காக தனியார் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 14 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். நெல்லை சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவில் இருந்து ஆழ்வார்குறிச்சியில் உள்ள ஏ.டி.எம்.மில் நிரப்புவதற்காக, தனியார் வாகனம் மூலம் 14 லட்சம் ரூபாய் கொண்டு செல்லப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததால், அந்த பணத்தை நெல்லை பேட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் நெல்லை தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
 

00 Comments

Leave a comment