இனி நாம தான், இனி எப்பவுமே நாம தான் என திமுக தென்மண்டல பாக முகவர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சித்திரை திருவிழா போல கூடியிருக்கும் திமுக தொண்டர்களை பார்க்கும் போது நம்பிக்கை அதிகரித்து கொண்டே இருப்பதாகவும் கூறி உள்ளார். திமுக தென்மண்டல பாக முகவர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது;வீரம், பாசம், கோயில், சாப்பாடு என்றாலும் மதுரை தான், இங்கு எல்லாமே பிரபலம்தான். அப்படி பெருமைமிகு மதுரையில் 'என் வாக்குச் சாவடி, வெற்றி சாவடி' பயிற்சி மாநாட்டில் கலந்து கொண்டு உங்களையெல்லாம் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. சித்திரைத் திருவிழா போல கூடியிருக்கும் உங்களைப் பார்த்து உற்சாகம் அடைகிறேன். உத்தங்குடி முழுக்கவே உடன்பிறப்புகள் குடியேறிவிட்டதுபோல உணர்வு. இனி நாம தான். இனி எப்போதுமே நாம தான்.நாற்பதுக்கு நாற்பது வெற்றி பெற்றோம்நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது வெற்றி பெற்றோம். ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தைத் தொடங்கி இந்தியாவிலேயே அதிகளவில் கிட்டத்தட்ட ஒரு கோடி உறுப்பினர்களை அதில் இணைத்தோம். வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிரத் திருத்தம் மூலம் பலரின் பெயர்கள் நீக்கப்பட்டபோதும் யாருடைய பெயரும் நீங்கிடாத வகையில் பம்பரமாக சுழன்ற இயக்கம் திமுக.திருச்சியில் தான் மெயின் பிக்சர்மதுரை மாநாடு வெறும் ட்ரைலர்தான், திருச்சியில் தான் மெயின் பிக்சர் இருக்கிறது. திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் பத்து லட்சம் பேரை திரட்ட திட்டமிட்டிருக்கிறோம். அடுத்த இரண்டு மாதங்களுக்கு திமுகவினருக்கு ஓய்வே கிடையாது. எல்லாவற்றையும் திட்டமிட்டு வைத்திருக்கிறோம். சமூக வலைதளமாக இருந்தாலும், வீடுகளாக இருந்தாலும் திமுகவினர் தீவிரமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு பூத்துக்கும் 350 வாக்குகள் என்ற இலக்கை வைத்துக் கொண்டாலே எளிதாக வெற்றி பெற்று விடலாம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். Related Link தேர்தல் பயணம்