Also Watch
Read this
By: Manigandan Raja

ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் :
இலங்கை கடற்படை சிறைபிடித்து இலங்கை சிறையில் வாடும் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீனவர்கள் 22 பேரையும் நான்கு படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தி
ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர் வேலை நிறுத்தம் காரணமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்துள்ளனர்.
இலங்கை, மற்றும் மத்திய அரசை கண்டித்து மீனவர்கள் மற்றும் மீனவ குடும்பத்தினர் தங்கச்சி மடத்தில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved