news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews டிவி சத்தத்தால் வெடித்த தகராறு
tv

Also Watch

tv

Read this

டிவி சத்தத்தால் வெடித்த தகராறு

குண்டூர், ஆந்திரா

68

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வீட்டில் இருந்து கேட்ட இளைஞரின் அலறல் சத்தம். ஓடிச்சென்று பார்த்த மக்களுக்கு அதிர்ச்சி. நடுவீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த கணவன். ரத்தம் படிந்த கத்தியுடன் நின்று கொண்டிருந்த மனைவியை கஸ்டடியில் எடுத்து விசாரித்த போலீஸ். அடுத்தடுத்த விசாரணையில் வெளியான பகீர் தகவல்கள். கட்டிய கணவனை மனைவியே கத்தியால் குத்தி கொலை செய்தது ஏன்? பின்னணி என்ன?

* வீட்டில் இருந்து கேட்ட இளைஞரின் அலறல் சத்தம்
* உயிருக்கு போராடிய ஷேக் அகமது
* மனைவி கிராந்தியை கஸ்டடியில் எடுத்து விசாரித்த போலீஸ்

சாயங்காலம் நேரம், குண்டூர் பகுதியில உள்ள ஒரு வீட்ல இருந்து இளைஞரோட அலறல் சத்தம் கேட்ருக்கு. அத கேட்ட அக்கம்பக்கத்தினர் ஷேக் அகமதுங்குற இளைஞரோட வீட்டுக்கு போய்ருக்காங்க. அப்ப நடுவீட்ல இளைஞர் உடம்பு ஃபுல்லா கத்திக்குத்துக் காயங்களோட உயிருக்கு போராடிட்டு இருந்தாரு. அவருக்கு பக்கத்துல மனைவி கிராந்தி கையில ரத்தம் படிஞ்ச கத்தியோட கொலை வெறியில நின்னுட்டு இருந்துருக்காங்க. இதபாத்து அதிர்ச்சியடைஞ்ச மக்கள், கிராந்திய கையும் களவுமா பிடிச்சு, ஷேக் அகமத மீட்டு ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வச்சாங்க. ஆனா அங்க அவர பரிசோதித்த டாக்டர், ஷேக் அகமது உயிரிழந்துட்டதா சொல்லிட்டாங்க. இந்த விஷயத்த கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ், அகமத் மனைவி கிராந்திய போலீஸ் ஸ்டேஷனுக்கு கூப்டு போய் விசாரிச்சாங்க. அதல தான் ஷேக் அகமது எதுக்காக கொலை செய்யப்பட்டார்? இவங்களுக்குள்ள அப்படி என்ன பிரச்னை ஏற்பட்டதுன்னு தெரியவந்துச்சு.

* ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வந்த ஷேக் அகமது
* கிராந்தி என்ற பெண்ணுடன் ஷேக் அகமதுக்கு பழக்கம்
* கணவன் சிறையில் இருக்கும்போது மனைவி கள்ளக்காதல்


ஆந்திராவுல உள்ள குண்டூர் மங்களகிரி பகுதிய சேந்தவரு ஷேக் அகமது. இவரு ஏசி மெக்கானிக்கா வேலை பாத்துட்டு இருந்தாரு. இதனால தாய் தந்தை கூட வசிச்சுட்டு இருந்தாரு. இதுக்கிடையில ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி இவரு அதே பகுதியை சேந்த கிராந்தி என்ற பெண்ணோட வீட்டுக்கு ஏசி சரி செய்ய போய்ருக்காரு. கிராந்திக்கு ஏற்கனவே கல்யாணமாகி குழந்தைங்க இருக்கிறதா கூறப்படுது. இவரோட கணவன் ஏதோ ஒரு வழக்குல சிறையில இருக்காருன்னு சொல்லப்படுது. இந்த நிலையில ஏசி சரிச்செய்ய போனப்ப, ஷேக் அகமதும் அந்த பெண்ணும் நெருங்கி பழக ஆரம்பிச்சாங்க. அது நாளாக நாளாக தகாத உறவா மாறிருக்கு. கணவன் சிறையில இருந்ததால ஷேக் அகமதை அடிக்கடி வீட்டுக்கு கூப்டுற பெண், அவரு கூட தனிமையிலையும் இருந்துருக்காங்க.

* திருமணம் செய்து வாழ்ந்து வந்த ஷேக் அகமது - கிராந்தி
* இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்
* வேலைக்கு சென்று வீடு திரும்பிய கணவன் ஷேக் அகமது

அதுக்கடுத்து ரெண்டு பேரும் வீட்டை விட்டு வெளியேறி, கல்யாணம் பண்ணிக்கிட்டு அதே பகுதியில உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புல வசிச்சுட்டு இருந்தாங்க. கல்யாணமான புதுசுல ரெண்டு பேரும் ஜாலியா வாழ்ந்துட்டு இருந்துருக்காங்க. ஆனா அதுக்கப்புறம் ரெண்டு பேருக்கும் இடையில அடிக்கடி பிரச்னை ஏற்பட்டிருக்கு. தொட்டதுகெல்லாம் பிரச்னை ஏற்பட்டதால ரெண்டு பேரும் ஒரே வீட்ல இருந்தாலும் பேசாமலேயே இருந்துருக்காங்க. வேலைக்கு போய்ட்டு வீட்டுக்கு வர்ற கணவனுக்கு மனைவி சாப்பாடு கூட எடுத்து வைக்காம எந்நேரமும் டிவி பார்த்துட்டு இருப்பாங்களாம். இதனால கணவன் ஷேக் அகமது, கிராந்திய போட்டு அடிச்சுருக்காரு. சம்பவத்தன்னைக்கு வேலைக்கு போய்ட்டு சாயங்காலம் 4 மணிக்கா வீட்டுக்கு திரும்பிருக்காரு கணவன் ஷேக் அகமது.

டிவி சத்தத்தை குறைக்க சொன்னதால் ஆத்திரம்
கிராந்தியை கைது செய்து விசாரித்து வரும் போலீஸ்


அப்ப டிவில ரொம்ப சவுண்டா வச்சு மனைவி பார்த்துட்டு இருந்துருக்காங்க. இதனால கடுப்பான கணவன் எதுக்கு டிவிய இவ்ளோ சவுண்டா வச்சுருக்க, பக்கத்து வீட்ல ஆட்கள்லாம் இருக்காங்க, அவங்களுக்கு டிஸ்டர்ப் ஆகப்போகுதுன்னு சொல்லிருக்காரு. அதுக்கு கிராந்தி, எனக்கு இப்படி சவுண்ட் வச்சு கேட்டாதான் நல்லா இருக்கு, என்னால சவுண்ட கம்மி பண்ண முடியாதுன்னு திட்டிருக்காங்க. இதனால மறுபடியும் ரெண்டு பேருக்கு இடையில பிரச்னை ஏற்பட்டிருக்கு. அப்ப கிராந்திய ஷேக் அகமது போட்டு பயங்கரமா அடிச்சுருக்காரு. இதனால கடும் கோபமான கிராந்தி கிச்சன்ல இருந்து கத்திய எடுத்துட்டு வந்து ஷேக் அகமது கை, கால், முகம்ன்னு எல்லா இடங்களையும் சரமாரியா குத்தி கொலை பண்ணிட்டாங்க. விசாரணையோட முடிவுல எல்லா உண்மையையும் தெரிஞ்சுக்கிட்ட போலீஸ், கத்தியோட நின்னுட்டு இருந்த மனைவி கிராந்திய அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க.

Related Link
காணாமல் போன பெண் சடலமாக மீட்பு

காணாமல் போன பெண் சடலமாக மீட்பு

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுத்த 2 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம் கணிப்பு

9
10 hrs 42 mins agoshare
அடுத்த 2 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம்  கணிப்பு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved