தமிழ்நாடு

வீட்டின் முன் நிறுத்திப்பட்டிருந்த 2 பைக்குகள் எரிந்து சேதம்

வீட்டின் முன் நிறுத்திப்பட்டிருந்த 2 பைக்குகள் எரிந்து சேதம்

தேனி போடிநாயக்கனூரில் வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்ட 2 பைக்குகளுக்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் தீ வைத்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போடிநாயக்கனூர் டி.வி.கே.கே நகர் பகுதியில் உள்ள மாரிச்சாமி என்பவரின் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பைக்குகள் தீடிரென தீப்பற்றி பெட்ரோல் டேங்க் வெடித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அருகிலிருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து விட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் இரு வாகனங்களும் தீயில எரிந்து சேதமானது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் தீ வைத்தார்களா அல்லது பெட்ரோல் குண்டு வீசினார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வரும் நிலையில், இருவர் சந்தேகத்திற்குரிய வகையில் பைக்கில் சுற்றி வந்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
 

00 Comments

Leave a comment