தமிழ்நாடு

வீட்டின் பூட்டை உடைத்து 85 சவரன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 85 சவரன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கம் திருட்டு

திண்டுக்கல்லை அடுத்த சிலுவத்தூர் சாலையில் மாலப்பட்டி பிரிவு பெட்ரோல்பங்க்
அருகே கருப்பையா என்ற துபாய் கருப்பையா தனது மனைவி மற்றும் மகனுடன் வீட்டில்
குடியிருந்து வருகிறார்.மேலும் வீட்டின் அருகில் சொந்தமாக பெட்ரோல் பங்க்
நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் கருப்பையா மற்றும்
அவருடைய மனைவி இருவரும் சொந்த வேலையின் காரணமாக வெளியில் சென்றுள்ளனர்.
அவருடைய மகன் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் நிர்வாக வேலை செய்து கொண்டு
இருந்துள்ளார். இதற்கிடையே வெளியே சென்ற கருப்பையா மற்றும் மனைவி இருவரும்
இரவு 9:30 மணியளவில் வீட்டில் வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு
திருட்டு சம்பவம் அரங்கேறியது தெரிய வந்தது. வீட்டின் பின்பக்கமாக உள்ளே ஏறி
வந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோக்களின் பூட்டை
உடைத்து 85 பவுன் தங்க நகை, ரூ.3 லட்சம் பணம் ஆகியவற்றை திருடி சென்றனர். இதனை
அடுத்து சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர் விரைந்து வந்து
கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தீவிர விசாரணை செய்து
கொள்ளையர்களை தேடி வருகின்றனர். திண்டுக்கல்லில் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம்
இருக்கக்கூடிய சாலையில் அரங்கேறியுள்ள இந்த திருட்டு சம்பவத்தால் பெரும்
பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

00 Comments

Leave a comment