தமிழ்நாடு

பிரச்சனையில் தலையிட்ட நண்பனுக்கு கொலை மிரட்டல் பாபி ஷிம்ஹா, KGF வில்லன் நடிகர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு | KGF villain actor

அடுக்கு மாடி கட்டிடம் கட்டுவது தொடர்பான பிரச்சனையில் தலையிட வேண்டாம் என்று கூறி, நண்பனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகர் பாபிஷிம்ஹா மற்றும் கேஜிஎப் வில்லன் நடிகரான ராமசந்திரா ராஜி உள்ளிட்ட நான்கு பேர் மீது கொடைக்கானல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை பகுதியில் நடிகர் பாபிஷிம்ஹா கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டிடத்தை ஒப்பந்தம் அடிப்படையில் ஜமீர் என்பவர் கட்டிவந்தார். இந்த நிலையில், பாபிஷிம்ஹாவிற்கும் ஜமீருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனை தீர்த்து வைக்க பாபிஷிம்ஹாவின் நண்பரான உஷேன் சரி செய்ய முற்பட்டார்.

00 Comments

Leave a comment