தமிழ்நாடு

முதலமைச்சரை வரவேற்க கட்டப்பட்டிருந்த தோரணங்கள் வாழை தார்களை பறித்து சென்ற தொண்டர்கள் திமுக முப்பெரும் விழாவில் நிர்வாகிகள் அதிர்ச்சி | DMK Executives Shocked at Triple Celebration

முதலமைச்சர் முக ஸ்டாலினை வரவேற்க கட்டப்பட்டிருந்த வாழை மர தோரணங்களில் இருந்து வாழைத்தார்களை தொண்டர்கள் சிலர் போராடி அறுத்து எடுத்து கொண்டு செல்லும் காட்சி அரங்கேறியது. வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் நடைபெற்ற திமுகவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழாவில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். முதல்வர் நிகழ்ச்சியை முடித்து கொண்டு சென்ற நிலையில் விழா மேடைக்கு அருகில் கட்டப்பட்டிருந்த வாழை தோரணங்களில் இருந்த குலைகளை தொண்டர்கள் சிலர் பறித்து சென்றனர்.
 

00 Comments

Leave a comment