news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தோழர் நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை
tv

Also Watch

tv

Read this

தோழர் நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை

72 குண்டுகள் முழங்க மரியாதை

46

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

எந்த வித பாகுபாடு பார்க்காமல், பழகிய பண்பு நிறைந்த தோழர் நல்லகண்ணுவின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரை உலகத்தினர் நேரில் இறுதி மரியாதை செலுத்தினர்.

* நடிகர் ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி உள்ளிட்டோர் மரியாதை
* முன்னாள், இன்னாள் அமைச்சர்கள், எம்.பிக்கள் அஞ்சலி


சென்னை தியாகராயநகரில் உள்ள பாலன் இல்லத்தில், வைக்கப்பட்டிருந்த தோழர் நல்லகண்ணுவின் உடலுக்கு திராவிடர் கழக தலைவர் வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். நடிகர் ரஜினிகாந்த்,சூர்யா, கார்த்தி, பார்த்திபன், பாண்டியராஜன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட திரைத்துறையினர் வாழ்நாள் போராளி தோழர் நல்லகண்ணு உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

* தோழர் நல்லகண்ணுவுக்கு முதலமைச்சர் இறுதி மரியாதை
* தகைசால் தமிழருக்கு வீரவணக்கம், செவ்வணக்கம் என முழக்கம்


மறைந்த தோழர் நல்லகண்ணு உடல் மீது மலர் வளையம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி அஞ்சலி செலுத்தினார். அப்போது, தகைசால் தமிழருக்கு வீரவணக்கம்! செவ்வணக்கம் என முதலமைச்சர் முழக்கமிட, அங்கிருந்த கூட்டணி கட்சித் தலைவர்களும் வீரவணக்கம் என முழக்கமிட்டு, நல்லகண்ணுவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

* 72 குண்டுகள் முழங்க மரியாதை
* சென்னை மருத்துவக் கல்லூரியில் உடல்


மறைந்த முதுபெரும் தலைவர் நல்லகண்ணு உடலுக்கு 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து, ஆயிரக்கணக்கானோர் புடைசூழ ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, நல்லகண்ணு ஆசைப்படி மருத்துவ ஆய்வுக்காக சென்னை மருத்துவக் கல்லூரியில் உடல் ஒப்படைக்கப்பட்டது.

Related Link

"காற்றில் கரைந்த கறைபடியா கரங்கள்"

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடுரோட்டில் பற்றி எரிந்த பள்ளி வாகனம்

4
7 hrs 18 mins agoshare
School van fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau