தமிழ்நாடு

கோடி அற்புத புனித அந்தோணியார் ஆலய அலங்கார தேர்பவனி புத்தாண்டை ஒட்டி வெகு விமரிசையாக நடைபெற்ற தேர்பவனி

கோடி அற்புத புனித அந்தோணியார் ஆலய அலங்கார தேர்பவனி  புத்தாண்டை ஒட்டி வெகு விமரிசையாக நடைபெற்ற தேர்பவனி

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே கலிக்கம்பட்டியில் புத்தாண்டை ஒட்டி கோடி அற்புத புனித அந்தோணியார் ஆலயத்தில், மின் அலங்கார தேர்பவனி வெகு விமரிசையாக நடைபெற்றது. ஜனவரி 1ஆம் தேதி இரவு தேவாலயத்தில் பங்குத்தந்தை மற்றும் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் தலைமையில் திருவிழா ஆடம்பரத் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து வாணவேடிக்கை, கொட்டுமுரசு ஒலிக்க கோடி அற்புத புனித பதுவை அந்தோணியாரின் மின் அலங்கார தேர்பவனி நடைபெற்றது. அதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

00 Comments

Leave a comment