தமிழ்நாடு

பூண்டி ஏரியில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிப்பு..

திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்யும் கனமழையால் பூண்டி ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து 2500 கன அடி உபரி நீர் திறக்கப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழையின் காரணமாக பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு வரும் நீரின் அளவு தற்போது அதிகரித்து வருகிறது. தற்பொழுது அணையின் முழு கொள்ளளவான 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடியில் இருந்து  2 ஆயிரத்து 902 மில்லியன் கன அடி நீர் நிரம்பியுள்ளது. இந்த நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி திறக்கப்படும் உபரி நீரின் அளவு ஆயிரம் கன அடியில் இருந்து 2 ஆயிரத்து 500 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், கொசஸ்த்தலை ஆறு கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். 

00 Comments

Leave a comment