news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பேருந்து சேவை மக்களுக்குதானே?
tv

Also Watch

பேருந்து சேவை மக்களுக்குதானே?

மதுரை

83

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
mdu(3)

மேலூரில், இரவு நேரத்தில் போதிய பேருந்துகள் இல்லாமல், பெண்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டு வருதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலூரில் இருந்து சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு கிராமங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இரவு நேரத்தில் மேலூரில் இருந்து பல்வேறு கிராம பகுதிகளுக்கு இயக்கப்படும் 20க்கும் மேற்பட்ட பேருந்துகள் மதுரையில், நடைபெறும் முதல்வர் நிகழ்ச்சிக்கு கட்சியினரை அழைத்துச் செல்வதற்கு இயக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அரசு நிகழ்ச்சிக்கு சென்ற அரசு பேருந்துகள்
இதனால் மேலூர் பேருந்து நிலையத்தில் இருந்து கிராம பகுதிகளுக்கு இரவு நேரத்தில் செல்லும் பேருந்துகள் இயக்கப்படாததால், அன்றாட பணிகள் முடித்து சொந்த ஊர்களுக்கு திரும்பும் பெண்கள் மற்றும் பள்ளி,கல்லூரி முடித்து திரும்பும் மாணவ, மாணவிகள் போதிய பேருந்துகள் இல்லாமல் பேருந்து நிலையத்தில் நீண்ட நேரமாக காத்திருந்துள்ளனர்.

பேருந்து இல்லாமல் நீண்ட நேரம் காத்திருக்கும் பெண்கள்
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, இரவு நேரத்தில் மேலூரில் இருந்து கிராம பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகள் மதுரையில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிக்கு சென்றிருப்பதாக கூறுகின்றனர். இதனால் இரவு நேரத்தில் பேருந்துகள் இல்லாமல் பெண்கள், மற்றும் மாணவ, மாணவிகள் என பலரும் பேருந்து நிலையத்தில் நீண்ட நேரமாக காத்திருக்கிறோம். இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அரசு பேருந்துகள் செல்லும் போது, பொதுமக்கள் பாதிக்காத வகையில் மாற்று பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

Related Link
லாரி மீது வேன் மோதி விபத்து

லாரி மீது வேன் மோதி விபத்து

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved