Also Watch
Read this
By: Manigandan Raja

மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் - டிரம்ப் :
ஈரான் மீண்டும் அணு ஆயுதத்தை உருவாக்கினால் மோசமான பின்விளைவுகளை சந்திக்கக் கூடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமைதி ஒப்பந்தம் இறுதியானது குறித்து பேசிய அவர், ஈரான் இனி எப்போதும் அணு ஆயுதத்தை வைத்திருக்க போவதில்லை என்பதுதான் உண்மையிலேயே தனக்கு முக்கியமான விஷயம் எனவும், இதை ஈரான் தெளிவாக சொல்லி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இனிமேல் ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கப் போவதில்லை எனவும், அப்படி செய்தால் மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்ற பிரதமர் மோடி :

ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் சந்தித்து பேசினார். பிரான்ஸ் நாட்டின் எவியன் நகரில் நடைபெறும் ஜி 7 உச்ச மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சென்றார்.
அவரை பார்த்ததும், டிரம்ப் எழுந்து சென்று அவருடன் கைகுலுக்கி, சிறிது நேரம் உரையாடினார். கடந்த ஆண்டு பிப்ரவரியில் வாஷிங்டன் டி.சி.யில் வெள்ளை மாளிகையில் இருவரும் சந்தித்து கொண்டனர். அதன் பிறகு, 16 மாதங்களுக்கு பிறகு இருவரும் மீண்டும் சந்தித்துள்ளனர். தொடர்ந்து, உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக இருவரும் இன்று இருதரப்பு ஆலோசனைக்கான சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளனர்.
உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர முடிவு :

உக்ரைனுக்கு எதிராக கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா மீதான அழுத்தத்தை அதிகரிக்க ஜி7 நாடுகளின் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
பிரான்ஸில் நடைபெற்று வரும் ஜி7 உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இது தொடர்பாக உறுப்பு நாடுகளின் தலைவர்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். இதைத் தொடர்ந்து, எரிவாயு மற்றும் எண்ணெய் மீதான தடைகள் மூலம் ரஷ்யா மீதான அழுத்தத்தை அதிகரிக்க ஜி7 தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜி7 அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு :
உலக நாடுகள் இடையே கூட்டாண்மை பலப்பட நம்பிக்கை மிக அவசியம் என பிரதமர் மோடி தெரிவித்தார். பிரான்ஸின் எவியான் நகரில் நேற்று தொடங்கிய ஜி7 அமைப்பின் உச்சி மாநாட்டில் பேசிய அவர், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எப்போதும் உலகமே ஒரு குடும்பம் மற்றும் மனிதநேயமே முதன்மை என்ற தத்துவத்தின் அடிப்படையில் இயங்குவதாகத் தெரிவித்தார்.
மேலும், தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மனிதனை மையமாக கொண்டதாக இருக்க வேண்டும் எனவும், இந்தியாவில் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப திட்டம் அனைவரும் பயன்பெற வேண்டும் என்ற கொள்கையின்படி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved