news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews திருவெள்ளவாயல் திருவெள்ளீஸ்வரர் கோயில் விழா
tv

Also Watch

tv

Read this

திருவெள்ளவாயல் திருவெள்ளீஸ்வரர் கோயில் விழா

மீஞ்சூர், திருவள்ளூர்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
திருவெள்ளீஸ்வரர் கோயில்

திருவள்ளுர் மாவட்டம்,பொன்னேரி அடுத்த திருவெள்ளைவாயல் கிராமத்தில் தொண்டை மண்டலத்தில் சோழ மன்னர்கள் ஆட்சி செய்யும் காலத்தில் கிபி ஏழாம் நூற்றாண்டில் பராந்திக சோழன் என்னும் சோழ மன்னன் வலம் வரும்போது சிவபூஜை செய்வதற்கு சிவலிங்கம் இல்லை என்று மனம் வருந்தி நெல்லை அளக்கக்கூடிய மரக்காவை தலைகீழாக கவிழ்த்து வைத்து சிவலிங்கமாக பாவித்து சிவபூஜை செய்து வந்தான்.

அப்போது சிவபெருமான் மன்னர் கனவில் தோன்றி தனக்கு மேற்கு முகமாக ஆலயம் எழுப்புமாறு கூறியதன் விளைவாக சுவாமிக்கு ஸ்ரீ திருவெள்ளீஸ்ர் என்றும்,அம்பாளுக்கு சாந்த நாயகி என்றும் திருநாமம் சூட்டி ஆலயம்
அமைக்கப்பட்டது.


இரண்டு ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயம் 40 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிகழ்ச்சியில் தற்போது ஆலயம் புணரமைக்கப்பட்டு சுவாமி சன்னதி,விமான கோபுரம்,அம்மன் சன்னதி கோபுரம்,மகா கணபதி,சன்னதி,பாலசுப்பிரமணியர் சன்னதி, சண்டிகேஸ்வரர்,நந்திகேஸ்வரர்,பைரவர்,சூரியர் நிறைவாக பரிவார சகிதம் நூதனமாக அமைக்கப்பெற்றுள்ளது.

இதற்கான ஆலய அஸ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் சர்வ சாதகர் தியாகராஜகுருக்கள்,கண்ணன் சிவாச்சாரியார் மற்றும் சர்வ சாதகர்கள் வேதம் ஒங்க மேளதாளங்கள் முழங்க யாக சாலையிலிருந்து பிராதன கலசங்கள்,பரிவார கலசங்கள் புறப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைப்பெற்று பல்வேறு புண்ணிய நதிகள் இருந்து கொண்டுவரப்பட்ட நன்னீரை கோபுர கலசத்திற்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.பின் தீர்த்தபிரசாதமும்
அன்னதானமும் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாட்டினை திருவெள்ளைவாயல் கிராம பொதுமக்கள் செய்தனர். சென்னை, மீஞ்சூர்,பொன்னேரி உள்ளிட்ட சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இதில் கலந்துக்கொண்டனர்.

Related Link
முட்டை விலை குறையுமா? கூடுமா? பண்ணையாளர்கள் ஷாக் நியூஸ்

முட்டை விலை குறையுமா? கூடுமா? பண்ணையாளர்கள் ஷாக் நியூஸ்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரீல்ஸ் மோகம் - இளம் தம்பதிகள் அட்ராசிட்டி

0
4 mins agoshare
ரீல்ஸ் மோகம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved