news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews திருப்பத்தூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல்
tv

Also Watch

tv

Read this

திருப்பத்தூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல்

ராச்சமங்கலம், திருப்பத்தூர்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சாலை மறியல்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ராச்சமங்கலம் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் கடந்த 3 மாதங்களாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் துறைசார்ந்த அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படும் நிலையில் இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிமக்கள் இன்று அரசு பேருந்தை சிறைப்பிடித்து காலிக்கூடங்களுடன் அரைமணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.


இதன் காரணமாக அந்த அரசு பேருந்தில் பயணம் செய்த பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பணிக்கு செல்லும் ஆண்கள் பெண்கள் என அனைவரும் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

அதன்பிறகு இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் அதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்காமல் உடனடியாக குடிநீர் விநியோகம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .

இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Link
ரூ.50,000 மதிப்புள்ள மின்சாதனப் பொருட்கள் திருட்டு

ரூ.50,000 மதிப்புள்ள மின்சாதனப் பொருட்கள் திருட்டு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரீல்ஸ் மோகம் - இளம் தம்பதிகள் அட்ராசிட்டி

0
4 mins agoshare
ரீல்ஸ் மோகம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved