Also Watch
Read this
By: Manigandan Raja

திருச்செந்தூரிலிருந்த 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு விரைவு பேருந்து சென்னைக்கு சென்றது இந்தப் பேருந்தை சிவகுரு என்பவர் ஒட்டிக்கொண்டு வந்தார் இந்த பேருந்தானது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது ஓட்டுனரின் தூக்க கலக்கத்தால் கட்டுப்பாட்ட இழந்த அரசு விரைவு பேருந்து சாலையோரம் உள்ள வேப்ப மரத்தின் மீது மோதி 10 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிந்து விபத்துக்குள்ளானது.

இதில் ஒரு குழந்தை உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் படுகாயம் அடைந்தவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்த பணியில் ஈடுபட்டு வருவதோடு விபத்து குறித்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved