Also Watch
Read this
By: Manigandan Raja

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள துங்கபுரம் கிராமத்தில் தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், துங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா, அவரது மனைவி கவிதா மற்றும் தங்கை ஜெயந்தி ஆகியோர் தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து மூவரையும் குன்னம் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் தப்பியோடிய அடையாளம் தெரியாத நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கைது நடவடிக்கையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved