Also Watch
Read this
By: Manigandan Raja

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் குள்ளங்காடு என்ற இடத்தில் வேலன் கார்டன் என்ற பகுதி அமைந்துள்ளது இந்நிலையில் இந்த வேலன் கார்டன் பகுதியில் தேவராஜன் என்பவர் தனக்கு சொந்தமான வீடு ஒன்று கட்டி வருகிறார்.
இந்த வீடு கட்டும் பணியினை திருப்பூர் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் புவனேஷ் என்பவரிடம் ஒப்படைத்துள்ளார். இந்த நிலையில் நேற்றைய தினம் பகல் நேரத்தில், இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள்
இருவர் வீட்டினை நோட்டமிட்டபடி அங்கு சுற்றித்திரிந்துள்ளனர்.

பின்னர் அங்கு வீடு கட்டுமான பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 50,000 மதிப்பிலான மின்சாதன பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். பொருட்கள் காணாமல் போனது குறித்து ஒப்பந்ததாரர் புவனேஷ் சிசிடிவி கேமராவினை ஆய்வு செய்தபோது, அதில் பட்டப் பகலில் இரண்டு இளைஞர்கள் கட்டிடத்தில் இருந்த பொருட்களை மர்ம நபர்கள் திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தொடர்ந்து சம்பவம் குறித்து குமாரபாளையம் காவல் நிலையத்தில் ஒப்பந்ததாரர் புவனேஷ் புகார் அளித்துள்ளார். குமாரபாளையம் போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved