Also Watch
Read this
By: Manigandan Raja

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி: மமதா பானர்ஜி வழக்கு :
சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியடைந்ததை எதிர்த்து, திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முன்னாள் முதலமைச்சருமான மமதா பானர்ஜி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
பவானிபூர் தொகுதியில் போட்டியிட்ட இவர், பாஜக வேட்பாளரும், தற்போதைய முதல்வருமான சுவேந்து அதிகாரியிடம் 15 ஆயிரத்து 105 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
கட்டுப்பாடற்ற லாரி அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதியது :
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே தேவனஹள்ளி நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற சரக்கு லாரி ஒன்று, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது. தொடர்ந்து, எதிர்புற சாலைக்குள் புகுந்த லாரி, எதிரே வந்த போலேரோ வாகனத்தையும் தூக்கி வீசியது
விமானப்படை அதிகாரி மனைவிக்கு பாலியல் வன்கொடுமை :

மகாராஷ்டிராவில் இந்திய விமானப்படை அதிகாரி மனைவியை மது அருந்த வைத்து, பாலியல் வன்கொடுமை செய்ததோடு, மதமாற்றமும் செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நாக்பூரை சேர்ந்த அவர், தனது பள்ளி தோழனுடன் நட்பாக பழகி வந்த நிலையில், நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதை வீடியோவும் எடுத்து வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
"டெலிகிராம் தடை: 15 கோடி பயனர்களுக்கான தண்டனை" :

இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை, 15 கோடி பயனர்களுக்கான தண்டனை என அதன் தலைமை செயல் அதிகாரி பாவெல் டுரோவ் தெரிவித்துள்ளார். சில பயனர்கள் கசிந்த தேர்வு வினாத்தாள்களை பகிர்ந்து கொண்டதால், தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் வினாத்தாள் கசிவு நின்றுவிடப் போவதில்லை எனவும், அது மற்ற செயலிகளுக்கு மாறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
திரிணாமுல் எம்பி அபிஷேக் பானர்ஜியிடம் சிஐடி விசாரணை :

மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யும், மமதா பானர்ஜியின் உறவினருமான அபிஷேக் பானர்ஜியிடம் சிஐடி போலீஸார் 3-வது நாளாக விசாரணை மேற்கொண்டனர். தேர்தல் பிரசாரத்தின்போது இருதரப்புக்கு இடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டின்கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் 6 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved