தமிழ்நாடு

விமர்சனங்களுக்கு பின் துவங்கிய மதுரை எய்ம்ஸ் கட்டுமானம்

விமர்சனங்களுக்கு பின் துவங்கிய மதுரை எய்ம்ஸ் கட்டுமானம்

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் மதுரை எய்ம்ஸ் தொடர்பாக எழுப்பப்பட்ட விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் கட்டுமானப் பணிகளை துவங்கியுள்ள எய்ம்ஸ் நிர்வாகம் அது தொடர்பாக நாள்தோறும் புதிய தகவல்களை வெளியிட்டு வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் 5 ஆண்டுகள் ஆகியும் கட்டுமானப் பணிகள் துவங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இது தொடர்பாக அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், தற்போது பிரபல தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

00 Comments

Leave a comment