தமிழ்நாடு

மறத்தியம்மன் கோயில் சித்திரை திருவிழா கோலாகலம்

மறத்தியம்மன் கோயில் சித்திரை திருவிழா கோலாகலம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிறந்த வீட்டு பெண்களை புகுந்த வீட்டு பெண்கள் வரவேற்கும் விநோத திருவிழா நடைபெற்றது. தவசியேந்தல்பட்டி கிராமத்தில் உள்ள மறத்தியம்மன் கோயில் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு, தவசியேந்தல்பட்டியை பூர்வீகமாக கொண்டு, திருமணமாகி வெளியூரில் வாழும் பெண்கள் தாங்கள் பிறந்த கிராமத்திற்கு சீர்வரிசை எடுத்து வந்தனர். அப்போது ஊர் எல்லையில் காத்திருந்த புகுந்த வீட்டுப் பெண்கள், அவர்களுக்கு ஆரத்தி எடுத்து, ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் அனைவரும் ஒன்றிணைந்து காட்டுக்குள் இருக்கும் பல நூற்றாண்டு பழமையான மறத்தியம்மன் கோயிலுக்கு பூத்தட்டுகளை சுமந்து சென்று அம்மனை வழிபட்டனர்.
 

00 Comments

Leave a comment