தமிழ்நாடு

இபிஎஸ் பேச்சு குறித்து அமைச்சர் டி.ஆர்.பி ராஜா விமர்சனம் இல்லாததை இருக்கு என சொல்வதே வேலை என சாடல்

இல்லாததை இருக்கு என்று சொல்வதுதான் எதிர்க்கட்சித் தலைவரின் வேலையே.
திருவாரூரில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பேட்டி.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு
பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு
மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கலந்து கொண்டார்.இதில்
திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து துறை
அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் திருவாரூர் சட்டமன்ற
உறுப்பினர் பூண்டி கலைவாணன் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் நிர்மல்ராஜ் மாவட்ட
ஆட்சியர் சாருஸ்ரீ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர்.

முன்னதாக திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் தயார் நிலையில்
வைக்கப்பட்டுள்ள ஆயுதப்படை காவலர்களைக் கொண்ட பேரிடர் மீட்புக் குழுவினை
அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பார்வையிட்டார்.அதனைத் தொடர்ந்து திருவாரூர் நன்னிலம்
மன்னார்குடி திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை உள்ளிட்ட ஐந்து பகுதிகளுக்கு
இந்த மீட்பு குழு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் திருவாரூரில் இரண்டு குழுக்கள்
தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஆய்வுக்கூட்டத்தின் முடிவில் செய்தியாளர் சந்தித்த டி.ஆர்.பி ராஜா
இல்லாததை இருக்கு என்று சொல்வதே எதிர்க்கட்சித் தலைவருக்கு வேலையாக
இருக்கிறது.அவர் சொல்வதற்கு என்று எதுவும் இல்லை. சென்னையை பொருத்தவரை எல்லா
பிரதான சாலைகளிலும் மழை பெய்த சிறிது நேரத்தில் மழை நீர் வடிந்து
விடுகிறது.ஒரு சில இடங்களில் குப்பைகள் அடைத்ததால் சிறிது பாதிப்பு
இருந்தது.அதனையும் உடனடியாக மாநகராட்சி சார்பில் மேயர் உள்ளிட்ட பொறுப்பு
அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை
எடுத்திருக்கிறார்கள். அதேபோன்று முதலமைச்சரும் நேரில் சென்று அதிகாரிகளை
அழைத்து பேசி நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

இந்த திராவிட மாடல் ஆட்சியில் எந்த பிரச்சினை நடந்தாலும் அரசு ஊழியர்கள் தயார்
நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது அதேபோன்று
சிறப்பாக தமிழக அரசு ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.இந்த நிலையில் மழை
நேரத்தில் பொதுவாக அதிக முன்னெச்சரிக்கையுடன் இருக்கின்றனர்.முதலமைச்சர்
நேரடியாக களமிறங்கி உள்ளதால் எல்லோரும் களத்தில் தான் இருக்கிறார்கள் மிக
சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை 176 இடங்கள் மழையால் பாதிக்கக்கூடிய
இடங்களாக கண்டறியப்பட்டு அந்த இடத்திற்கு என்ன தேவைப்படும் என்பதையும் அந்த
ஆய்வுக் கூட்டத்தின் மூலம் கண்டறிந்துள்ளோம். அங்கே முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து கூட்டத்தில்
ஆலோசிக்கப்பட்டது.தேவைப்பட்டால் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது
குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.வடக்கு நோக்கி புயல் நகர்வதால் அந்த
அளவுக்கு மழை இருக்காது என்று நம்புகிறோம். இருந்தாலும் சிறப்பாக மாவட்ட
ஆட்சித் தலைவர் தலைமையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.ஒரு
மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் கையிருப்பில் உள்ளது.மேலும் மழையால் இந்த
பொருட்கள் பாதிக்கப்படாத அளவிற்கு தினமும் அதனை கண்காணிக்க வேண்டும் என்றும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

இபிஎஸ் பேச்சு குறித்து அமைச்சர் டி.ஆர்.பி ராஜா விமர்சனம்  இல்லாததை இருக்கு என சொல்வதே வேலை என சாடல்

00 Comments

Leave a comment