உத்தரபிரதேசம்... ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரின் வீட்டில் வேலை செய்த தம்பதி. பணத்திற்காக தம்பதி செய்த கொடூரச் செயல். ரயில்வே ஊழியரையும், அவரது மகளையும் அறைக்குள் அடைத்து வைத்து சித்ரவதை. சாப்பாடு, தண்ணீர் கொடுக்காமல், அணுஅணுவாக சித்ரவதை செய்த தம்பதி. உடல் மெலிந்த நிலையில் எலும்பும் தோலுமாக காட்சியளித்த தந்தை, மகள். தந்தை, மகள் அனுபவித்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது எப்படி? தம்பதி சிக்கினார்களா?நண்பகல் நேரம். அமர் சிங்-ங்குற நபர், தன்னோட அண்ணன் ஓம் பிரகாஷ பாக்க அவங்க வீட்டுக்கு போய்ருக்காங்க. அப்ப அமர் சிங்க வீட்டு வாசல்லையே தடுத்து நிறுத்துன ராம் பிரகாஷ் - ரமாதேவி தம்பதி, உங்க அண்ணனுக்கு உங்கள பாக்க விருப்பம் இல்ல, அதனால இடத்த காலி பண்ணுங்கன்னு சொல்லிருக்காங்க. இதனால கடுப்பான அமர் சிங், நான் எப்ப வந்தாலும் நீங்க இததான் சொல்றிங்க, இன்னைக்கு எங்க அண்ணன பாக்காம போக மாட்டேன்னு சொல்லி ரெண்டு பேரையும் தள்ளி விட்டுட்டு வீட்டுக்குள்ள போய்ருக்காரு. அப்ப வீட்டுக்குள்ள எங்க தேடியும் ஓம் பிரகாஷ காணல. அதுக்கடுத்து ரொம்ப தூசிப் படிஞ்சு இருந்த ஒரு அறைய தொறந்து பாத்துருக்காரு அமர் சிங். அப்ப அந்த அறையே ரொம்ப இருட்டா இருந்துருக்கு. அதுக்குள்ள உடல் மெலிந்து போன நிலையில ஓம் பிரகாஷூம், நிர்வாணமான நிலையில அவங்க மகள் ரஷ்மியும் இருந்துருக்காங்க.இதபாத்து அதிர்ச்சியடைஞ்ச அமர் சிங், எங்க அண்ணனுக்கும், மகளுக்கும் என்ன ஆச்சுன்னு அந்த தம்பதி கிட்ட கேட்ருக்காரு. அதுக்கடுத்து அக்கம் பக்கத்துல உள்ளவங்கள உதவிக்கு கூப்பிட்ட அமர் சிங், ஓம் பிரகாஷையும், அவங்க மகளையும் கூப்டு பக்கத்துல உள்ள மருத்துவமனைக்கு போய்ருக்காங்க. அங்க ஓம் பிரகாஷ் உயிரிழந்துட்டதா சொல்லிட்டாங்க. ரஷ்மி தீவிர சிகிச்சை பிரிவுல அனுமதிக்கப்பட்டிருக்காங்க. இந்த விஷயத்த கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் ராம் பிரகாஷ் - ரமாதேவி தம்பதிய தங்களோட கஸ்டடியில எடுத்து விசாரிச்சாங்க. உத்தரபிரதேசத்துல உள்ள மஹோபா பகுதிய சேந்த ஓம் பிரகாஷ் ரயில்வேல வேலை பாத்துட்டு இருந்தாரு. இவருக்கு கல்யாணமாகி 27 வயசுல ரஷ்மின்னு ஒரு மகள் இருக்காங்க. ரஷ்மி மனநலம் பாதிக்கப்பட்டவங்கன்னு கூறப்படுது. இதுக்கிடையில, ஓம்பிரகாஷ் 2015ஆம் ஆண்டுல ரயில்வே வேலையில இருந்து ஓய்வு பெற்றுருக்காரு. 2016ஆம் ஆண்டுல இவரோட மனைவியும் உடல்நலக் குறைவால உயிரிழந்துட்டாங்க. இதனால ஓம்பிரகாஷ் அதே பகுதியில உள்ள வேறொரு வீட்ல தன்னோட மகள கூப்டுட்டு குடிபோய்ருக்காரு. மகள் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததால அவங்னால வேலைக்கும் போக முடியாது, சமைக்கவும் முடியாது. அதனால வீட்டுல சமைச்சு போடுறதுக்கும், மகள பாத்துக்கிறதுக்காகவும் ராம் பிரகாஷ் - ரமாதேவி தம்பதிய வேலைக்காக பணியமர்த்திருக்காரு ஓம் பிரகாஷ். ஓம் பிரகாஷ் அந்த தம்பதி மேல ரொம்ப நம்பிக்கை வச்சுருந்தாரு. ஆனா அந்த தம்பதியோட குறுக்குப் புத்தி ஓம் பிரகாஷோட சொத்து மேல திரும்பிருக்கு. ஆரம்பத்துல ஓம் பிரகாஷையும், அவரோட மகளையும் நல்லபடியா பாத்துக்கிட்ட தம்பதி, அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா தங்களோட சுயரூபத்த காட்ட ஆரம்பிச்சுருக்காங்க.கிட்டத்தட்ட 5 வருஷத்துக்கு முன்னாடி ஓம் பிரகாஷ் தன்னோட ப்ரண்ட் வீட்டுக்கு போய்ட்டு வீட்டுக்கு திரும்பிருக்காரு. அப்ப வீட்டுக்குள்ள கால் எடுத்து வச்ச அடுத்த நொடியே, ஓம் பிரகாஷ கண்மூடித்தனமா தாக்குன ராம்பிரகாஷூம், ராமாதேவியும், அவர வீட்டோட கீழ் தளத்துல உள்ள அறைக்குள்ள வச்சு பூட்டிருக்காங்க. அதுக்கடுத்து அவரோட மகள் ரஷ்மியவும் சரமாரியா தாக்கி அந்த அறைக்குள்ள பூட்டி வச்சுருக்காங்க. அதுக்கப்புறம் அந்த வீட்டையே தங்களோட கண்ட்ரோல்க்குள்ள கொண்டு வந்த அந்த தம்பதி, வீட்ல இருந்த நகை, பணத்தையெல்லாம் தண்ணீர் மாதிரி செலவழிச்சுருக்காங்க. ஓம் பிரகாஷ்க்கும், அவரோட மகளுக்கும் ஒரு நாளைக்கு ஒரு வேலை தான் சாப்பாடு கொடுப்பாங்களாம். கதவ தொறந்தா ரெண்டு பேரும் தப்பிச்சுருவாங்கன்னு நினைச்ச தம்பதி, அவங்களுக்கு அந்த அறையில உள்ள ஜன்னல் வழியா சாப்பாடு கொடுத்துட்டு இருந்துருக்காங்க.இந்த தம்பதியோட நடவடிக்கைய பாத்து நொந்து போன ஓம்பிரகாஷ், எதுக்கு எங்கள இந்த மாதிரி பண்றிங்க, உங்களுக்கு என்னோட பணம், நகைன்னு எல்லாத்தையும் கொடுத்துறேன், என் சொத்த கூட உங்களுக்கு தந்துடுறேன். ஆனா என்னையும் என்னோட மகளையும் மட்டும் விட்ருங்க கெஞ்சுருக்காரு. ஆனா அத காது கொடுத்து கூட கேட்காத அந்த தம்பதி, உங்கள வெளியில விட்டா நீங்க எங்க ரெண்டு பேரையும் மாட்டி விட்ருவிங்கன்னு சொல்லிருக்காங்க. அதே மாதிரி ஓம் பிரகாஷ்க்கும் அவரோட குடும்பத்துகாரங்களுக்கும் சொத்து பிரச்னை இருந்துருக்கு. இதனால அதுசம்பந்தமா பேச அவரோட தம்பி அமிர் சிங்கும், சொந்தக்காரங்களும் அடிக்கடி வீட்டுக்கு வந்துருக்காங்க. ஆனா அவங்கள வீட்டு வாசல்லையே தடுத்து நிறுத்துன தம்பதி, ஓம் பிரகாஷ்க்கு உங்க மூஞ்சுல முழிக்கவே விருப்பம் இல்லன்னும், இனிமே இங்க வரகூடாதுன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாருன்னு பொய் சொல்லிருக்காங்க. இப்படியே 5 வருஷம் ஓடிருக்கு.கடைசி ஒரு மாசமா, ஓம்பிரகாஷ்க்கும் அவரோட பொண்ணுக்கும் சுத்தமா சாப்பாடு, தண்ணீர் கொடுக்காம ரொம்ப சித்ரவதை பண்ணிருக்காங்க. இதனால பசி தாங்க முடியாம ரெண்டு பேரோட உடம்பும் மெலிஞ்சு போய், சதை இல்லாம, எலும்பும் தோலுமா இருந்துருக்கு. இதுக்கிடையில ஓம் பிரகாஷ பாத்தே ஆகனும்னு அவரோட தம்பி அமிர் சிங் வீட்டுக்கு போய் அந்த தம்பதி கிட்ட சண்டை போட்டு உள்ள போய்ருக்காரு. அதுல தான் இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்துருக்கு. ஓம் பிரகாஷ் பேச்சு மூச்சில்லாம இருந்துருக்காரு. ரஷ்மி நிர்வாணமான நிலையில உடல் மெலிந்து போய், 80 வயசு மூதாட்டி மாதிரி இருந்துருக்காங்க. இதபாத்து அதிர்ச்சியான அமிர் சிங் ரெண்டு பேரையும் மீட்டு ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வச்சாங்க. அங்க ஓம்பிரகாஷ் உயிரிழந்துட்டதா டாக்டர் சொல்லிட்டாங்க. ரஷ்மி தீவிர சிகிச்சை பிரிவுல அனுமதிக்கப்பட்டிருக்காங்க. இதனால ராம் பிரகாஷ் - ரமாதேவி தம்பதிய கைது பண்ண போலீஸ் அவங்கள சிறையில அடைச்சுட்டாங்க. சொத்துக்காக வீட்டு உரிமையாளரும், அவரோட மகளும் வீட்டு வேலைக்காரர்களால சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியவே உலுக்கியிருக்கு.