news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இரண்டு அதிரடி தீர்ப்பு
tv

Also Watch

tv

Read this

இரண்டு அதிரடி தீர்ப்பு

ராணிப்பேட்டை

10

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RANI(2)

காவலர் மற்றும் போக்குவரத்து துறையில் ஓட்டுநராக பணிபுரிந்த இரு அரசு ஊழியர்கள் சாலை விபத்தில் உயிரிழந்ததால் இரு குடும்பங்களுக்கும் 94,00,000 லட்சம் ரூபாயை இழப்பீடு தொகை வழங்க மக்கள் நீதிமன்றம் நிகிழ்வு மாவட்ட நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மக்கள் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் விசாரணை
ராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நிகிழ்வு மாவட்ட நீதிபதி M.செல்வம் தலைமையில் நடைபெற்றது. முதலாம் கூடுதல் மாவட்ட நீதிபதி பாலகிருஷ்ணன் சார்பு நீதிபதி முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், அசல் வழக்குகள், குடும்ப நல வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது..

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உடனடி இழப்பீடு
இந்த நிலையில் சிப்காட் மணியம்பட்டுபகுதியை சேர்ந்த தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றிய ஜெகன் (26) பணியிலிருந்த போது கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 01-ஆம் தேதி விடுமுறைக்கு வீட்டுக்கு வந்து மீண்டும் பணிக்கு சென்றபோது இருசக்கர வாகன விபத்து உயிரிழந்தார். அதேபோல் தமிழ்நாடு போக்குவரத்து துறையில் ஓட்டுனராக பணிபுரிந்த ஆற்காடு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (57) என்பவர் கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி லாரி மோதி உயிரிழந்தார்.

ரூ. 94,00,000 லட்சம் இழப்பீடு
இதையடுத்து இரு விபத்து வழக்குகளை இழப்பீடு கோரி ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த முதலாம் கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சரவணன் வழக்கை நடத்தி வந்த நிலையில் இன்று மக்கள் நீதிமன்றம் மூலமாக தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றிய ஜெகன் குடும்பத்திற்கு ரூபாய் 51,75,000 லட்சம் மற்றும் தமிழ்நாடு போக்குவரத்து துறையில் ஓட்டுனராக பணிபுரிந்த ரவிச்சந்திரன் குடும்பத்திற்கு 43,00,000/- லட்சம் ரூபாயை மாவட்ட நீதிபதி செல்வம் இழப்பீடு தொகைகளை வழங்க உத்தரவிட்டார்.

Related Link
பொதுமக்கள் பதட்டம் அடைய வேண்டாம்

பொதுமக்கள் பதட்டம் அடைய வேண்டாம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக சார்பில் தேர்தல் பணிமனை ஆலோசனை கூட்டம்

1
9 hrs 27 mins agoshare
அமைச்சர் சேகர் பாபு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved