news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு கிடையாது
tv

Also Watch

tv

Read this

தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு கிடையாது

10 நாட்களுக்கு சிலிண்டர்கள் கையிருப்பு

10

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

இந்த மாத இறுதி வரை வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளதாக எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
எரிவாயு சிலிண்டருக்கான தேவை, கையிருப்பு குறித்து தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். வணிக ரீதியான சிலிண்டர்களை முன்னுரிமை அடிப்படையில் வழங்குவதற்கான சாத்தியக் கூறு குறித்தும், கேஸ் சிலிண்டர் பிரச்சனையை எதிர்கொள்வது குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் எடுத்த முடிவுகள் வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் விவாதித்தார். தமிழகத்தில், இன்னும் பத்து நாட்களுக்கு வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் கையில் இருப்பதாக ஆலோசனையின் போது அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தட்டுப்பாடு கிடையாது...
இதனை தொடர்ந்து, மாநில அரசு எண்ணெய் நிறுவன ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை கூறியதாவது;
தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு கிடையாது. மக்களிடையே ஏற்பட்ட அச்சத்தால் ஒரேநாளில் பெட்ரோல் விற்பனை 100 சதவீதமும், டீசல் விற்பனை 75 சதவீதமும் அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் பெட்ரோல், டீசல் 9 நாட்களுக்கு கையிருப்பு உள்ளது. பெட்ரோல் டீசல் குறித்து பயம் கொள்ளத் தேவையில்லை.

வீட்டு உபயோக சிலிண்டர்கள் 25 நாட்களுக்கு ஒரு முறை நகர் பகுதியில் வினியோகம் செய்யப்படுகிறது. கிராமப்புற பகுதிகளில் 45 நாட்களுக்கு ஒரு முறை வீட்டு உபயோக சிலிண்டர் வழங்கப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர்கள் இம்மாத இறுதிவரை ஸ்டாக் உள்ளது. மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் போன்ற இடங்களுக்கு வணிகர் ரீதியான சிலிண்டர்கள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.
இவ்வாறு அண்ணாதுரை கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்று சாதனை படைக்க விருப்பம்

0
2 mins agoshare
KL Rahul








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved