Also Watch
Read this
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு, தவெக தலைவர் விஜய் வருவாரா? என்பது குறித்து, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் கூறி உள்ளார்.

திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்
இதுதொடர்பாக, சென்னையில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது;
வரும் தேர்தலில் திமுக தலையிலான ஆட்சி அகற்றப்பட வேண்டும் என தமிழக மக்கள் எண்ணுகின்றனர். இது தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்குமான தேர்தல் என்று, முதல்வர் ஸ்டாலின் கூறி இருந்தார். ஆனால், இது குடும்ப ஆட்சிக்கும், தமிழக மக்களுக்குமான தேர்தல் என்று, நான் கூறி இருந்தேன். அதற்கான காரணம், விவசாயிகளின் கடனை ரத்து செய்வதாகக் கூறினர். ஆனால், அதை அவர்கள் செய்யவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை. டாஸ்மாக் ஊழல் கிட்டத்தட்ட மிகப்பெரிய எண்ணிக்கையில் போய்க் கொண்டு உள்ளது. போதைப் பொருட்கள் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. 2 வயது சிறுமியை கூட விட்டு வைக்காமல் வன்கொடுமை செய்கின்றனர்.

தூத்துக்குடி சம்பவம்
தூத்துக்குடியில், பிளஸ் டூ மாணவியை, ஒன்று சேர்ந்து வன்கொடுமை செய்து, கொலை செய்தனர். இது என்றைக்கோ ஒரு நாள் நடக்கக்கூடிய செய்தி அல்ல, தினம் தினம் இது மாதிரியான அவலங்கள் நடைபெறுகின்றன. கஞ்சா புழக்கம் அதிகமாக இருக்கிறது. உலகம் முழுவதும் போர் நடக்கிறது. ஆனால் இந்தியாவில் போர் இல்லை, தமிழகத்தில் தான் அக்கப்போராக உள்ளது. அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் கூட்டம் இருப்பதாக திமுகவினர் கட்டமைக்கின்றனர். அவர்களிடம் பண பலம், அதிகார பலம் இருக்கிறது. என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

விஜய் வருவாரா?
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு விஜய் வருவாரா? என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் எனது தனிப்பட்ட கருத்தை கூற முடியாது. கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக விஜய் டெல்லி செல்கிறார்; அவர் டெல்லி செல்வது இது முதன்முறையல்ல.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved