Also Watch
Read this
By: Manigandan Raja

2 ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிப்பு :
காயத்தில் இருந்து குணமடைந்து வரும் டெல்லி வீரர் லுங்கி நிகிடி அடுத்த 2 ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேட்ச் பிடிக்க முயன்ற டெல்லி வீரர் லுங்கி நிக்கிடிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் நிலைகுலைந்த அவர் மைதானத்திலேயே மயங்கி விழுந்தார்.
இந்தியாவுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி :
இந்தியாவுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க மகளிர் அணி, 4க்கு 1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியது. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய மிட்செல் சான்ட்னர் :

காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய நியூசிலாந்து வீரர் மிட்செல் சான்ட்னருக்குப் பதிலாக, தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகாராஜை மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது மிட்செல் சான்ட்னர் தனது இடது தோள்பட்டையில் பலத்த காயத்தை சந்தித்தார்.
ஐபிஎல் - 9,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் :

ஐபிஎல் தொடரில் 9,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை பெங்களுரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி படைத்துள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் விளையாடிய அவர், ஆட்டமிழக்காமல் 23 ரன்கள் எடுத்திருந்தார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 9,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை கோலி படைத்துள்ளார்.
ஐபிஎல் - மோசமான சாதனை படைத்த டெல்லி அணி :

ஐபிஎல் வரலாற்றில் பவர் பிளேவில் மிகக்குறைவான ரன்களை எடுத்த அணி என்ற மோசமான சாதனையை டெல்லி அணி படைத்துள்ளது. நேற்று நடைபெற்ற பெங்களுரு அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெறும் 75 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதில் பவர்பிளே ஓவர்களான முதல் 6 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெறும் 13 ரன்கள் மட்டுமே எடுத்தது.
டெல்லியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி :
ஐபிஎல் தொடரின் 39-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களுரு அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 16 புள்ளி 3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 75 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தொடர்ந்து விளையாடிய பெங்களுரு அணி, வெறும் 6 புள்ளி 3 ஓவரில் இலக்கை தாண்டி, 1 விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.