news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews உணவக ஊழியரை தாக்கிய போதை இளைஞர்கள்
tv

Also Watch

tv

Read this

உணவக ஊழியரை தாக்கிய போதை இளைஞர்கள்

மயிலாடுதுறை

11

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மயிலாடுதுறை ஹோட்டல் பிரச்சனை

ஊழியரை தாக்கிய போதை இளைஞர்கள் :

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தில் செந்தில் என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். இந்த உணவகத்தில் கடந்த 25ஆம் தேதி மாலை உணவு வாங்க
வந்த மயிலாடுதுறை அம்பேத்கர் தெருவை சேர்ந்த 17வயது சிறுவன் ஒருவர், உள்ளே வந்த சோயா சாஸ்சை எடுத்து அதிகமாக ஊற்றி சிக்கன் பிரைடு ரைஸ் பார்சல் கேட்டுள்ளார்.

ஆர்டர் போட்டு வரும்படி மாஸ்டர் ஆரோன் கூறுகையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஆரோன் சிறுவனை தாக்கிய நிலையில் கைகலப்பு ஏற்பட்டது உணவக ஊழியர்கள் சிறுவனை விரட்டியுள்ளனர்.

தொடர்ந்து சிறுவன் தனது சகோதரர் பிரவீன் உள்ளிட்ட 6 பேர் அடங்கிய கும்பலுடன் வந்து உணவக ஊழியர்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தினர். உணவு தயார் செய்யும் சரக்கு
மாஸ்டர் ஆரோணை கையில் கிடைத்த பொருட்கள் கொண்டு தாக்கியதில், தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்தது.

ரத்தம் சொட்ட சொட்ட நின்ற ஆரோணை மீண்டும் மீண்டும் தாக்கினர். தடுத்தவர்களையும் தாக்கிவிட்டு தப்பி சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அம்பேத்கர் நகரை சேர்ந்த 17வயது சிறுவன் அவரது அண்ணன் பிரவீன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து சிறுவனை தஞ்சை கூர்நோக்கு மையத்திலும் பிரவீனை சிறையிலும் அடைத்தனர்.

பிரவீன் மீது கஞ்சா, உள்ளிட்ட அடிதடி வழக்குகள் உள்ளது. உணவக ஊழியர்களை 6 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தும் சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் போதையில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தாக்குதலின் போது மேஜையில் இருந்த செல்போனையும் திருடிசென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. பழைய பேருந்து நிலையத்தில் 24 மணி நேரம் காவல்துறை பாதுகாப்பு உள்ள நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. மேலும் தாக்குதலில் ஈடுபட்ட சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Link
யார் எருதை முதலில் கட்டுவது? என இருதரப்பினர் மோதல்

யார் எருதை முதலில் கட்டுவது? என இருதரப்பினர் மோதல்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்

2
6 hrs 28 mins agoshare
எம்பாப்பே








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved