தமிழ்நாடு

வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மனு

வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மனு

மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்தவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது. சேகர் என்பவர் தாக்கல் செய்த இந்த மனுவில் மனுதாரர் வேறு தொகுதியை சேர்ந்தவர் முன்மொழிந்துள்ளதாக கூறி தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், வேறு தொகுதியைச் சேர்ந்தவர்கள் முன்மொழிய எந்த தடையும் இல்லை என வாதிட்டார். அப்போது சட்டவிரோத நிராகரிப்பை காரணம் காட்டி தேர்தல் வழக்கு தொடர்ந்தால், தேர்தலையே ரத்து செய்ய கோரலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள், தற்போது தபால் வாக்குப்பதிவு துவங்கி விட்டதால் மனுதாரர் கோரிய நிவாரணம் வழங்க முடியாது எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

00 Comments

Leave a comment