தமிழ்நாடு

சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் பொதிகை ரயிலில் சோதனை

சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் பொதிகை ரயிலில் சோதனை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில், சென்னையில் இருந்து
செங்கோட்டை நோக்கி சென்ற பொதிகை ரயிலில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். பயணிகளின் உடமைகள் அனைத்தும் திறந்து பார்த்து தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மக்களவை தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

00 Comments

Leave a comment