சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்தை வழிமறித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அச்சுக்கட்டு பகுதியை சேர்ந்த காய்கறி வியாபாரியான ஜலீல் அகமது என்பவர் காரைக்குடியில் இருந்து மதுரைக்கு செல்லும் தனியார் பேருந்தில் திருப்பத்தூர் செல்வதற்காக ஏறி உள்ளார். அப்போது திருப்பத்தூர் பயணிகளை ஏற்றமாட்டோம் என கூறியதால் பேருந்து நடத்துநருக்கும் ஜலீலுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.அதே பேருந்து திருப்பத்தூர் பேருந்து நிலையம் வந்தபோது, ஜலீல் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த பொதுமக்கள் வழிமறித்து முற்றுகையிட்டனர். போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வாகனத்தை விடுவித்தனர். ((மதுரையில் இருந்து திருப்பத்தூர் வழியாக தேவகோட்டை செல்லும் தனியார் பேருந்துகளும், தேவகோட்டை, காரைக்குடியில் இருந்து மதுரை செல்லும் தனியார் பேருந்துகளும் திருப்பத்தூர் பயணிகளை ஏற்க மறுப்பது தொடர்கதையாகி வருவதாக கூறப்படுகிறது.))
தமிழ்நாடு
00 Comments
Leave a comment