தமிழ்நாடு

மணிப்பூரில் காணாமல் போன மெய்தி பழங்குடியின மாணவர்கள் குறித்த அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் | Manipur

மணிப்பூரில் கடந்த ஜூலை மாதம் காணாமல் போன மெய்தி பழங்குடியின மாணவர்கள் இருவர், உயிரோடு இருக்கும் போதும், அதன் பின் கொலை செய்யப்பட்டு கிடக்கும் புகைப்படங்களும் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. ஒரு புகைப்படத்தில் மெய்தி இனத்தை சேர்ந்த இரு மாணவர்களும் புல்வெளி பகுதியில் அமர்ந்திருப்பதும், அவர்களுக்கு பின்னால் இருவர் துப்பாக்கிகளுடன் நின்றிருக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. எனவே பின்னால் நின்றிருந்த இருவர் தான் மாணவர்களை கொலை செய்திருக்க வேண்டும் என நம்பப்படுவதோடு, அவர்களை அடையாளம் காண மணிப்பூர் போலீசார் உதவியுடன் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். மாணவர்களை கொலை செய்தவர்கள் மீது விரைவாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசும் உறுதியளித்துள்ளது.

00 Comments

Leave a comment