இந்தியா

ஸ்ரீராமநவமி ஊர்வலத்தில் நடந்த குண்டுவெடிப்பு - பெண் காயம்

ஸ்ரீராமநவமி ஊர்வலத்தில் நடந்த குண்டுவெடிப்பு - பெண் காயம்

மேற்குவங்கத்தின் முர்ஷிதாபாத்தில் ராமநவமி ஊர்வலத்தில் குண்டு வெடித்ததில் பெண் ஒருவர் காயமடைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமர் அவதரித்த தினமான ஸ்ரீ ராமநவமி, நேற்று நாடு முழுவதும் ராம பக்தர்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள சக்திபூரில் ராம நவமி பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தபோது பேரணியில் திடீரென குண்டு வெடித்தது. இதில் பெண் ஒருவர் காயடைந்த நிலையில், அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

00 Comments

Leave a comment