news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த இளைஞர்
tv

Also Watch

tv

Read this

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த இளைஞர்

கோயம்பேடு, சென்னை

35

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CMBT

மோசடி செய்த இளைஞர் :

விருதாச்சலம் பகுதியை சேர்ந்த தாஜ்தீன் , பிரபு ஆகிய இரு இளைஞர்கள் வேலை தேடி வந்துள்ளார். அப்போது அவரது நண்பர் மூலம் பழக்கமான கௌதம் என்பவர் தனக்கு
அரசு உயர் அதிகாரிகள் தெரியும் எனவும் அரசியல்வாதிகள் தெரியும் எனவும் இதனால் அரசு வேலை அல்லது தனியார் கம்பெனிகளில் உயர் பொறுப்பில் வேலை வாங்கி தருவதாக
ஆசை வார்த்தை கூறியுள்ளார் .

இதை நம்பி இருவரும் அவரிடம் சிறுக சிறுக ஐந்து லட்சத்திற்கு மேல் பணம் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் வேலை வாங்கி தராததால் உடனடியாக தனக்கு வேலை வாங்கித் தர வேண்டி பணத்தை இழந்தவர்கள் நிர்பந்தித்ததால் கௌதம் தனக்கு ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான செல்வப் பெருந்தகை தெரியும் எனவும்.

அவரது PA மூலம் உனக்கு வேலை வாங்கி தருவதாக கூறி உடனடியாக சென்னையில் உள்ள எம்எல்ஏ ஆஸ்டலில் செல்ல பெருந்தகை PA வை சந்திக்குமாறு கூறியுள்ளார். இதனை நம்பி
கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு செல்ல பெருந்தகை பிஏ சந்திக்க சென்றுள்ளார்.

ஆனால் அங்கு இருந்த செக்யூரிட்டி அவரை உள்ளே கூட விடாமல் இருந்துள்ளார். இதுகுறித்து கவுதமிடம் கேட்டபோது இதோ வருகிறார், அதோ வருகிறார் என அலைக்கழித்துள்ளார். இதனால் கடுப்பான பிரபு மற்றும் தாஜ்தீன் , தாஙகள் ஏமாற்றுவதை புரிந்து கொண்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

மேலும் தன்னை ஏமாற்றிய கௌதம் குறித்த ஆடியோ ஒன்றும் வெளியிட்டுள்ளார் இதே போல் மோசடி நபர் கௌதம் பல பேரிடம் பல லட்ச ரூபயை ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது ஆகவே
போலிசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Link
காளியம்மன் கோயிலில் மாசி மாத தீமிதி திருவிழா கோலாகலம்

காளியம்மன் கோயிலில் மாசி மாத தீமிதி திருவிழா கோலாகலம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பேருந்து வசதி கேட்டு பள்ளி மாணவர்கள் மறியல்

2
2 hrs 37 mins agoshare
மாணவர்கள் மறியல்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved