news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பேருந்து வசதி கேட்டு பள்ளி மாணவர்கள் மறியல்
tv

Also Watch

tv

Read this

பேருந்து வசதி கேட்டு பள்ளி மாணவர்கள் மறியல்

வாகை குளம், நெல்லை

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மாணவர்கள் மறியல்

நெல்லை மாவட்டம் அழகிய பண்டிபுரம் அடுத்த வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் ரெட்டியார்பட்டியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு சென்று வர பகுதிக்கு காலையில் பேருந்து ஒன்று இயக்கப்படுகிறது.

இந்த பேருந்தை பயன்படுத்தி அப்பகுதி மாணவ மாணவிகள் சென்று வரும்போது அதிக கூட்ட நெரிசல் ஏற்படுவதாகவும் போதிய இடவசதி இல்லை எனவும் கூறி பலமுறை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டரிடம் மனு அளித்துள்ளனர் ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி அப்பகுதி மாணவ மாணவிகள் திடீரென இன்றைய தினம் காலையில் சாலை மறியல் போராட்டத்தில் வாகைகுளம் பகுதியில் ஈடுபட்டனர்.

அப்போது மாணவர்கள் சிலர் சாலையில் படுத்து உருண்டு போராட்டம் நடத்தினர் இது குறித்து மாணவி உருவ தெரிவிக்கும்போது தெற்கு வாகைகுளம் வடக்கு வாகைகுளம் என இரண்டு ஊர்களுக்கும் ஒரே பேருந்து இயக்கப்படுகிறது வடக்கு வாகைகுளம் வாங்கி குளத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் அடுத்த ஊரில் உள்ளவருக்கு இடம் இல்லை எனவும் இதுபோல் இடமில்லாமல் இருந்தால் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தவறான வார்த்தைகளால் பேசுகின்றனர் என குற்றம் சாட்டினார்.

மேலும் வடக்கு வாகை குளத்திற்கு தனி பேருந்து காலை மாலை இரண்டு வேலைகளிலும் இயக்க வேண்டும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எங்கள் பகுதியில் படித்து வருகிறோம்
எங்களுக்கான தனி பேருந்து வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.

இதேபோல் தெற்கு வகைகளும் பகுதியிலும் இதேபோல கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டதால் இருபகுதியிலும் பெரும் பரபரப்பு நிலவியது காவல்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி இரு தரப்பையும் சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளதோடு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு எடுத்து தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.

Related Link
டியூஷன் சென்டரில் மாணவர்கள் அராஜகம்

டியூஷன் சென்டரில் மாணவர்கள் அராஜகம்

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பேருந்து வசதி கேட்டு பள்ளி மாணவர்கள் மறியல்

2
1 hr 17 mins agoshare
மாணவர்கள் மறியல்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved