news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சிவகங்கை மாவட்டத்தின் புதிய ஆட்சியர் பொறுப்பேற்பு
tv

Also Watch

tv

Read this

சிவகங்கை மாவட்டத்தின் புதிய ஆட்சியர் பொறுப்பேற்பு

சிவகங்கை

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நிஷாந்த் கிருஷ்ணா

சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் 46 ஆவது ஆட்சியராக நிஷாந்த் கிருஷ்ணா இ.ஆ.ப கையெழுத்திட்டு பொறுப்பேற்றார். அன்மையில் தமிழக அரசு பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்துவந்த மாவட்ட ஆட்சியர்களை பணியிடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தது.

இதில் சிவகங்கை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்துவந்த பொற்கொடி இ.ஆ.ப அவர்கள் சமூக நலத்துறை கூடுதல் இயக்குநராகவும் நாகர்கோவிலில் மாநகராட்சி ஆனையாளராக பணிபுரிந்து வந்த
நிஷாந்த் கிருஷ்ணா சிவகங்கை ஆட்சியராக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டிருந்தது. இதனை அடுத்து இன்று சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் நிஷாந்த் கிருஷ்ணா இ.ஆ.ப அவர்கள் மாவட்டத்தின் 46 ஆவது ஆட்சியராக கோப்புகளில் கையெழுத்திட்டு பொருப்பேற்றுக்கொண்டார்.


அதன் பின் செய்தியாளர்களை சந்திக்கையில் பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் நலத்திட்டங்களில் அதிக கவனம் செலுத்தப்படும் என்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது முக்கியம் என்றும் அதேபோல் மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பேட்டியளித்தார்.

Related Link
போலி பாஸ்போர்ட் மோசடி  மீனவர் கைது

போலி பாஸ்போர்ட் மோசடி மீனவர் கைது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பேருந்து வசதி கேட்டு பள்ளி மாணவர்கள் மறியல்

2
1 hr 21 mins agoshare
மாணவர்கள் மறியல்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved