news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பென்னாகரம் அருகே கிராம மக்கள் சாலை மறியல்
tv

Also Watch

பென்னாகரம் அருகே கிராம மக்கள் சாலை மறியல்

பெரியகடமடை, தருமபுரி

58

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dharmapuri protest

கிராம மக்கள் சாலை மறியல் :

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் மஞ்ச நாயகன் அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய கடமடை கிராமத்தில் தனி நபருக்கு சொந்தமான சுமார் 18 ஏக்கரா பட்டா நிலம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலத்தின் வழியாக அப்பகுதி கிராம மக்கள் பல ஆண்டுகளாக வனப்பகுதியில் ஒப்பலகுண்டு முனியப்பன், பொண்மான் முனியப்பன் ஆகிய கோயில்களுக்கு வழிபாடு
செய்ய பயன்படுத்திய வழியாகவும் அதே போல் அதே வழியாக தாசர்குந்தி, சின்னூர் ,முதுகம்பட்டி, சீலநாயக்கனூர், ஏரியூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் வழியாகவும் இந்த வழிப்பாதையை பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் தனி நபருக்கு சொந்தமான பட்டா நிலத்தை ரவிச்சந்திரன் என்பவர் விலைக்கு வாங்கி கம்பி வேலி அமைத்து உள்ளார். முன்னிலையில் பல ஆண்டுகளாக கோயில்களுக்கும் அவ்வழியாக செல்லக்கூடிய ஊர்களுக்கும் பயன்படுத்தி வந்த வழிப்பாதையை கம்பி வழி போட்டு அடைத்ததால் பெரிய கடமடை கிராம மக்கள் நிலம் வாங்கிய உரிமையாளரிடம்
பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அதற்கு நிலத்தை வாங்கிய உரிமையாளர் உடன்படாததால் வட்டாட்சியரிடமும் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் அளித்துள்ளனர் இதுகுறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் இன்று திடீரென 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கால காலமாக பயன்படுத்தி வந்த வழிப்பாதையை மீட்டு தர கோரி பென்னாகரம் - மேச்சேரி செல்லக்கூடிய பிரதான சாலையில் சாலை மறியலில்
ஈடுபட்டனர்.

பென்னாகரம் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் ஏரியூர் இன்ஸ்பெக்டர் முரளி பென்னாகரம் இன்ஸ்பெக்டர் பாபு சுரேஷ் குமார் ஆகிய காவல்துறையினர் அடங்கிய குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் கிராம மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்திய வழித்தடத்தை மீட்டு தர கோரியும் வட்டாட்சியரிடம் இதுகுறித்து மனு கொடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும்.

பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கி வாகனங்களில் ஏற்றி கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

பட்டா நிலத்தில் பயன்படுத்தி வந்த வழிப்பாதையை மீட்டு தர கோரி பெரிய கடைமடை கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பிரதான சாலையில் செல்லக்கூடிய
வாகனங்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை குண்டு கட்டாக தூக்கி சென்றதால்.

சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த 50க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.

Related Link
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த இளைஞர்

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த இளைஞர்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பதக்கத்தை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் வாழ்த்து

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved